Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இரட்டை வேடம் போடுவதில்தான் திமுகவிற்கு விருப்பமா? - ஓபிஎஸ் ஆவேசம்!

    இரட்டை வேடம் போடுவதில்தான் திமுகவிற்கு விருப்பமா? – ஓபிஎஸ் ஆவேசம்!

    இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாய் 43 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களான இந்திய ரயில்வே, அனல் மின் நிலையங்கள், இரும்பு ஆலைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றிற்கான டீசல் விலை 97 ரூபாய் 49 காசு என்றும், சில்லறை விற்பனைக்கும் மொத்த கொள்முதலுக்கும் இடையேயான வித்தியாசம் கிட்டத்தட்ட 6 ரூபாய் என்றும், இந்த விலை உயர்வு காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

    இப்படியான சூழலில், தமிழ்நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குறைந்த கட்டணத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மொத்தக் கொள்முதல் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தியிருப்பதும், அதனை தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியில் இல்லாதபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தி.மு.க., தற்போது மொத்த கொள்முதல் டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தியும், இதனைக் கண்டித்து அறிக்கையும் விடவில்லை, விலையைக் குறைக்கவும் கோரிக்கை வைக்கவில்லை. ஒருவேளை வருவாய்க்காக இரட்டை விலைக் கொள்கையை தி.மு.க. வரவேற்கிறது போலும்! என்று தெரிவித்தார்.

    மேலும், “தி.மு.க.வின் இந்த ‘இரட்டை நிலைப்பாடு’ அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஏற்கனவே ஓய்வூதியப் பலன்களுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்ற சூழ்நிலையில், இந்த விலை உயர்வு காத்திருப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமோ என்ற அச்சம் ஊழியர்களிடையே நிலவுவதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே, இரட்டை டீசல் விலைக் கொள்கை குறித்த தி.மு.க.வின் நிலைப்பாட்டினை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டி, அவற்றில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....