Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எதுவுமே தெரியாது : ஓ.பி.எஸ் வாக்குமூலம்

    ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எதுவுமே தெரியாது : ஓ.பி.எஸ் வாக்குமூலம்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியுள்ளார்.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, தான் முதல்வராக இருந்த சமயத்தில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருடைய மரணம் பல்வேறு மர்மங்கள்மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தியதால், இதனைப் பற்றி விசாரிக்க ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டதில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு முன்பு 8 முறை சம்மன் அனுப்பியதில் இப்பொழுதுதான் முதன் முறையாக ஆஜராகி உள்ளார். 

    அங்கு வாக்குமூலம் அளித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் விழாவில் சந்தித்ததாகவும், அதற்குப் பின்பு பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு நீரழிவு நோய் இருந்தது மட்டும் தனக்கு தெரியும் என்றும், அவருக்கு இருந்த வேறு நோய்கள் பற்றி தெரியாது எனவும் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது ? யாரெல்லாம் அவருக்கு சிகிச்சை வழங்கினார்கள் ? போன்ற எந்த தகவலும் தனக்கு தெரியாது என்றும் தெரிவித்து உள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வத்துக்கு  முன்னதாக ஆஜராகிய சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது இரண்டு முறை மட்டுமே பார்த்தாகவும் அதுவும் வெளியில் இருந்து கண்ணாடி வழியே மட்டுமே பார்த்ததாகவும் கூறியுள்ளார். 1992 ஆண்டு தான் முதன் முதலாக  சசிகலா மூலமாக ஜெயலலிதாவுடனான அறிமுகம் ஏற்பட்டதாகவும், அதன் பின்பு போயஸ் கார்டன் வீட்டில் தங்கியிருந்த பொழுது தன்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் பேசமாட்டார் என்றும், பெரும்பாலும் குடும்பம் பற்றி மட்டுமே தன்னிடம் பேசுவார் என்றும் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜெயலலிதாவுடன் இளவரசியும் சிறையிலடைக்கப் பட்டது குறிப்படத்தக்கது.  சிறைசென்ற பொழுது ஜெயலலிதா உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதன்பின்பு 2016 சட்டமன்ற தேர்தலின் போது அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது எனவும் இளவரசி குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்  கொண்டிருந்தபொழுது சசிகலா மட்டுமே உடனிருந்தாகவும், தான் தினம் சென்று வருவேன் எனவும், இருமுறை மட்டும் கண்ணாடி வழியே அவரைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும், இளவரசி மருத்துவமனை சென்று அவரைச் சந்தித்து வந்தார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் அவர் இப்படி கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளதால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....