Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுநருக்கு எதிரான தாக்குதல்; கண்டித்து திமுகவை சாடிய ஓபிஎஸ்!

    ஆளுநருக்கு எதிரான தாக்குதல்; கண்டித்து திமுகவை சாடிய ஓபிஎஸ்!

    ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மறைமுக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே!

    நீட் தேர்வு மசோதா விவகாரங்கள், சமீபத்தில் தேநீர் விருந்தையும் தமிழக அரசு புறக்கணித்தது இது போன்றவற்றின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் நிலைப்பாடு இருப்பதாக தெரிகிறது.

    இந்நிலையில், “தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், நேற்று காலை மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மயிலாடுதுறை தருமபுரி ஆதின திருமடத்திற்கு செல்லும் வழியில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்” என்று ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், மேதகு ஆளுநருக்கு எதிரான இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மேதகு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் , சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது என்பதை ஓபிஎஸ் பதிவு செய்தார்.

    மேலும், இச்சம்பவத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக – பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள நிலையில், இது நிச்சயம் தி.மு.க. அரசிற்கு தெரிந்துதான் நடந்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

    மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க; இலங்கையின் நெருக்கடி நிலைக்கு நாங்கள் தான் பொறுப்பு : மன்னிப்பு கோரிய அதிபர் ராஜபக்சே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....