Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்னும் சில தினங்களில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வாய்ப்பு!!

    இன்னும் சில தினங்களில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வாய்ப்பு!!

     தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்தது முதல் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.

    govt

    தமிழகத்தில் சென்னை,சேலம், கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளன. இந்த வாக்குகளை எண்ணப்பட்டு வரும் 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.government

    வழக்கமாக தேர்தல் நடைபெறும் போதெல்லாம் தங்கள்  ஜனநாயக கடமையை நிறைவேற்ற, அரசு ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளில் அவர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, தமிழகத்தில், வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்படலாம் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    g office

    இந்த ஆண்டும் வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை என தெரிய வருகிறது. இதேபோல தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என தெரிய வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விடுமுறை அளிக்கப்படலாம் எனத்கூறப்படுகிறது. வரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ilayaraja

    13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் இளையராஜா..

    இளையராஜா 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார். இந்திய திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என...