Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள்; ரசாயனம் கலந்த நீர் தான் காரணமா?

    பவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள்; ரசாயனம் கலந்த நீர் தான் காரணமா?

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் கீழ்பவானி அணை அமைக்கப்பெற்றுள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலமாக விவசாய தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

    இந்நிலையில் பவானிசாகர் கீழ் பவானி அணை நீரேற்று நிலையம் அருகே, நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து பவானிசாகர் அணை, மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 

    கீழ்பவானி அணையில் இருந்து வாய்க்காலில் வெள்ளை நிறத்தில் ரசாயனம் கலந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயனம் கலந்த தண்ணீர் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில், ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் காரணமாக மீன்கள் இறந்து இருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். 

    சமரசத்தில் முடிந்த சிவகார்த்திகேயன் – ஞானவேல் ராஜா பிரச்சினை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....