Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்எதிர்பாத்திருந்த ரெட்மி நோட் 11 ப்ரோ-வின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    எதிர்பாத்திருந்த ரெட்மி நோட் 11 ப்ரோ-வின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    சமீபத்தில் சியோமி(Xiaomi) நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ்(Redmi Note 11 Series) ஸ்மார்ட்போன் வெளியானது. இந்நிலையில், அதன் ப்ரோ(Redmi Note 11 pro) மாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் தனது சியோமி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சியோமி நிறுவனம் அடுத்தது புதிய ஸ்மார்ட்போன்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடலின் ப்ரோ வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவருகிறது.

    முன்னதாக வெளியான சியோமி ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைப்பு வசதி இல்லாமல் குறையை தீர்க்க சியோமி நோட் 11 ப்ரோ(Xiaomi Note 11 Pro), சியோமி ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ்(Xiaomi Note 11 Pro Plus) என இரு மாடல் ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைப்பு ஆதரவுடன் வெளியாக உள்ளது.

    மார்ச் 9ஆம் தேதி இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது. 60% வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் சியோமி நிறுனத்திற்கு, இந்த புதிய ஸ்மார்ட்போன் கூடுதல் பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    • 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே
    • 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா
    • 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி
    • குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் 5ஜி சிப்செட்
    • ரூ.23,999 முதல் இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை
    • 5G ஆதரவு

    ரெட்மி நோட் 11 Vs ரெட்மி நோட் 11எஸ் Vs ரெட்மி நோட் 11 ப்ரோ:

    ரெட்மி நோட் 11ரெட்மி நோட் 11எஸ்ரெட்மி நோட் 11 ப்ரோ
    90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே
    50 மெகாபிக்சல் சாம்சங் கேமரா108 மெகாபிக்சல் சாம்சங் கேமரா108 மெகாபிக்சல் முதன்மை கேமரா
    33W பாஸ்ட் சார்ஜிங்33W பாஸ்ட் சார்ஜிங்67W பாஸ்ட் சார்ஜிங்
    ஆண்ட்ராய்டு 11,
    MIUI 13
    ஆண்ட்ராய்டு 11,
    MIUI 13
    ஆண்ட்ராய்டு 11,
    MIUI 13
    ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்மீடியாடேக் ஹீலியோ G96ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் 5G
    4G4G5G
    5000mAh பேட்டரி5000mAh பேட்டரி5000mAh பேட்டரி
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....