Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை; ஒடிசா அரசு செய்த காரியம் என்ன?

    பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை; ஒடிசா அரசு செய்த காரியம் என்ன?

    ஒடிசா அரசு, ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் அம்மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 

    ஒடிசா மாநிலத்தில், கடுமையான வெப்பக்காற்று வீசி வருகிறது. இதனால், பள்ளிக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில பள்ளிக் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ஒடிசா மாநில கல்வித்துறை  செயலாளர், பிரதாப் குமார் மிஸ்ரா சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதில், அதிக வெப்பக்காற்று வீசுவதால், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 26 முதல் 30 தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் மட்டும் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒடிசா மாநிலத்தில், கடந்த சில தினங்களாகவே அனல் கக்கும் வெப்பக்காற்று வீசி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் பல மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் 41 டிகிரி வெப்பத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து ஒடிசா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

    ஒடிசா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 40 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில், மொத்த மாநிலங்களில், சராசரியாக 35 டிகிரி வெப்பநிலையை தாண்டி பதிவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில், வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாகக் கூடும் என்கின்றனர் வானிலை கணிப்பாளர்கள். எப்போதும் வரும் கோடைக் காலத்தைவிட, இந்த ஆண்டு மிக மோசமான கோடைக்காலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

    ஏற்கனவே, நாடு முழுவதும் நிலக்கரியிருப்பு பற்றாக்குறையால் மின்வெட்டு நிகழ்ந்து வரும் நிலையில், வெப்பக்காற்றின் தாக்கமும் அதிகரித்து வருவதால் கோடை வெயிலின் ருத்ர தாண்டவம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றே  தெரிகிறது. 

    இதையும் படியுங்கள், தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் நடந்த விபரீத சம்பவம்; 11 பேர் பலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....