Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்பலாப் பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் உண்டென்று உங்களுக்கு தெரியுமா?

    பலாப் பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் உண்டென்று உங்களுக்கு தெரியுமா?

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் வெளியில் முட்கள் நிறைந்தும் உள்ளே மிகவும் சுவையான இனிப்பும் கொண்டுள்ளது. இந்தப்பதிவில் பலாப்பழம் சாப்பிடுவதால் நாம் பெரும் நன்மைகள் என்னவென்று காணலாம் வாருங்கள். 

    ஊட்டச்சத்துக்கள்: 

    பலாப்பழத்தில் வைட்டமின் எ, சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. 

    இரத்த அழுத்தத்திற்கு: 

    இதில், தேவையான அளவில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்த அளவினை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்து இருப்பதால் இதயம் சம்மந்தமான பிரச்சனைகளையும் தவிர்க்கிறது. பலாப்பழம் உடலில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine) அளவை சரியான அளவில் வைக்கிறது. 

    தைராய்டு பிரச்சனைகளுக்கு: 

    தைராய்டு சுரப்பி நமது உடம்பில் கழுத்து பகுதியில் சுரக்கக்கூடிய ஹார்மோன் சுரப்பி ஆகும். இது அதிகமாக சுரப்பதனை தவிர்த்து சரியான அளவில் சுரக்க பலாப்பழத்தில் உள்ள காப்பர் சத்து உதவுகிறது. 

    வலுவான எலும்புகளுக்கு:

    பலாப்பழத்தில், கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் எலும்புகள் தேய்மானம் அடைவதையும் தவிர்க்கிறது. குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்மந்தமான பிரச்சனைகள் வருவதையும் குறைக்கிறது. 

    முடி உதிர்வுக்கு: 

    பலாப்பழத்தில், வைட்டமின் எ சத்து அதிகம் இருப்பதால் முடி உதிர்வைக் குறைத்து முடி வளர உதவுகிறது. மேலும் பொடுகு மற்றும் தலையில் ஈரப்பதத்தை சரியான முறையில் வைத்திருக்க உதவுகிறது.

    கண்பார்வைக்கு:

    பலாப்பழத்தில், வைட்டமின் எ சத்து நிறைந்து காணப்படுவதால் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளான மாலைக் கண், கண்பார்வைக் குறைவு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. 

    இரத்த சோகைக்கு:

    பலாப்பழத்தில், வைட்டமின் சத்துக்களும் ஆக்சிஜெனேற்ற மூலப் பொருள்களும் இருப்பதால் இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை அதிகரித்து இரத்த சோகை வரமால் தடுக்க உதவுகிறது. 

    சரும நலத்திற்கு:

    உடலுக்கு மட்டுமல்ல பலாப்பழம், மேல்பூச்சாகவும் உட்கொள்வதாலும்  சருமத்தில் சிறப்பான பலன்களைக் காணலாம். குறிப்பாக பலாப்பழத்தில் உள்ள கொட்டை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பாலில் ஊறவைத்து அரைத்து முகத்திற்கு வாரம் ஒருமுறை தடவி வந்தால் நீங்களே நிஜத்தைக் காண்பீர்கள். 

    வயிற்று செரிமானத்திற்கு: 

    பலாப்பழத்தில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுவதால் வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் செரிமானத்திற்கும் உதவுகிறது. குடற்புற்று நோய் வரமால் தடுக்கவும் செய்கிறது. 

    நோய் எதிர்ப்பு சக்திக்கு: 

    பலாப்பழத்தில், வைட்டமின் எ மற்றும் சி சத்து இருப்பதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. 

    சர்க்கரை நோய்க்கு: 

    கரோடெனோய்ட்ஸ் பலாப்பழத்தில் இருப்பதால், இரண்டாம் வகை சர்க்கரை நோயைக் குணப்படுத்த உதவுகிறது. 

    சாதாரணமாகவே பலாப்பழம் என்றால் பிடிக்கும் இவ்வளவு இருக்கிறது என்று தெரிந்தால் சும்மா விடுவோமா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....