Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமீண்டும் முதலிடத்தில் ஜோகோவிச் : டேனியல் மெட்வடேவின் கனவை கலைத்த காயம்

    மீண்டும் முதலிடத்தில் ஜோகோவிச் : டேனியல் மெட்வடேவின் கனவை கலைத்த காயம்

    உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான டேனியல் மெட்வடேவ் அரையிறுதியில் தோற்றதன் காரணமாக முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இதனால் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    உலகின் முன்னணி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான மியாமி டென்னிஸ் ஓபன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டத்தில் நேற்று ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ், போலந்து நாட்டைச் சேர்ந்த ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் தோற்று வெளியேறினார். இந்த ஆட்டத்தில் 7-6 (9/7) மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் தோற்றார் டேனியல் மெட்வடேவ்.

    கடந்த வாரம் நடந்த இந்தியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்பு வரை உலகத்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார் டேனியல் மெட்வடேவ். ஆனால் அந்த தொடரின் மூன்றவாது சுற்றில் பிரான்சின் கேல் மான்ஃபில்ஸிடம் தோற்றதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

    இந்த மியாமி ஓபன் தொடரில் காலிறுதியில் வெற்றி பெற்றிருந்தால் முதலிடத்துக்கு முன்னேறி இருப்பார் டேனியல் மெட்வடேவ். இப்படிப்பட்ட நிலையில் ஆடிய நடப்பு யுஎஸ் சாம்பியனான டேனியல் மெட்வடேவ் துரதிஷ்டவசமாக நடப்பு மியாமி ஓபன் சாம்பியன் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் தோற்று வெளியேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் உலகத்தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இது வரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார். 

    இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வடேவ் காயம் காரணமாக சிறப்பாக விளையாட முடியவில்லை. அவரால் இரண்டு ஏஸ் சர்வீஸ்களை மட்டுமே போட முடிந்தது. ஆனால் அவரை எதிர்த்து ஆடிய ஹியூபர்ட் ஹர்காக்ஸ் 5 ஏஸ் சர்வீஸ்களை போட்டுத் தாக்கினார். மேலும், தானாகவே இழைக்கும் தவறுகளில் ஒன்றான டபுள்-பால்ட் தவறை 6 முறை இழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    தன்னுடைய காயம் குறித்து விவரித்த டேனியல் மெட்வடேவ் தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாகவும் மற்றும் கடுமையான தசைப்பிடிப்பால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய லாக்கர் அறையில் ஒரு மீனைப்போல சோபாவில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.  

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....