Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா : புதினை பதவி விலகக் கோரும் ஜோ...

    அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா : புதினை பதவி விலகக் கோரும் ஜோ பைடன்

    வடகொரியா புதிதாக கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையை தன்னுடைய நாட்டில் சோதனை செய்து பார்த்துள்ளது. இது அமெரிக்க நாட்டிற்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை பதவி விலக கூறியதும் சர்ச்சையாகி உள்ளது. 

    கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் அதிபர் கிம்-ஜாங்-உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வட கொரியா எப்பொழுதும் உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஏவுகணை சோதனை நடத்துவதுண்டு. சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட மிகப்பெரிய வாசோங்-17 என்ற ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. 

    இந்த ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் திறன் படைத்தது என்பதால் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சமயத்தில்தான் அதிபர் கிம் ஜாங் உன் வாசோங்-17 என்ற அந்த ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை சந்தித்து உள்ளார். அப்பொழுது பேசிய அவர்,

    வட கொரியா சக்தி வாய்ந்த ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இன்னும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை தயாரிக்க உள்ளோம். அணு ஆயுதங்களால் பிரச்சினை ஏற்பட்டு உலகப்போரே ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவுக்கு வடகொரியா ஆயுதங்களை தயாரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

    அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், கொரோனாவும் அதன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    மறுபுறம் உக்ரைன்-ரஷ்ய போர் உச்சத்தினை தொட்டு வருகிறது. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதின் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று கூறினார். இதற்கு பலதரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அவ்வாறு கருத்து கூறுவது தன்னுடைய அடிப்படை உரிமை என்று அவர் கூறியுள்ளார்.

    பட்ஜெட்டை அறிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதின் ஒரு சர்வாதிகாரி. ஈவு இரக்கமில்லாமல் மக்களைக் கொன்று குவித்து வருகிறார். இவ்வாறு கூறுவது என்னுடைய கோபம் அதனைத் தான் நான் வெளிப்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.

    மேலும், அவர் தன்னுடைய கருத்தினை பின்வாங்கப் போவதில்லை என்றும் ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் நடக்க ஆசைப்படுகிறான் என்றும் கூறியுள்ளார். தற்போதய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதவியில் இருக்கக் கூடாது. அவர் மிகவும் கெட்டவர். அப்பாவி மக்களை காரணமில்லால் கொன்று குவிப்பவர். அவர் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மேலும் பலர் இறக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....