Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் அகதிகளுக்கு உதவும் கரங்கள் : நோபல் பரிசை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்

    உக்ரைன் அகதிகளுக்கு உதவும் கரங்கள் : நோபல் பரிசை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்

    ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யாவுக்கு அருகில் உள்ளது உக்ரைன் நாடு. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த இந்த நாடானது பல வருடங்களாக ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு முயற்சி செய்து வருகிறது. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் இதனை மறுத்து வருவதால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது உக்ரைன் அரசு.

    ஆனால், அவ்வாறு நடந்தால் தன்னுடைய பகை நாடான அமெரிக்கா, உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவ வழிவகை ஏற்படும்  என்பதாலும் அது தன் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும் நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது ரஷ்யா. இதனை மறுத்த உக்ரைன் அரசு தன் முடிவில் உறுதியாக இருந்தது. 

    இதனால், கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்தது. இன்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், உக்ரைன் பின்வாங்காமல் போரிட்டு வருவதால் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ரஷ்ய ராணுவம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியும், குண்டுகளை வீசியும் வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குடிமக்கள் அதன் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றர். உலகின் பல நாடுகளும் உக்ரைன் அகதிகளுக்கு உதவிகளைச் செய்து வருகிறது. 

    இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளான 65 வயது மதிக்கத்தக்க ரோசலா நுதாங்கி என்பவரும், 48 வயது மதிக்கத்தக்க ஆன் பிரிடா என்பவரும் உக்ரைன் கீவ் நகரில் வீடு இழந்த 37 உக்ரேனியர்களுக்கும், ஒரு கேரள மாணவிக்கும் பணிவிடை புரிந்து பராமரித்து வருகின்றனர்.

    இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்பொழுது அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தாங்கள் எவ்வளவு துன்பம் வந்தாலும் இங்கிருந்து போகமாட்டாம் என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதே தங்களின் கடமை என்றும் தெரிவித்து உள்ளனர். 

    அதே நேரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் என்பவர், உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காகத் தன்னுடைய நோபல் பரிசை விற்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    காஸிடா எனும் பத்திரிக்கையை நடத்தி வரும் இவர், கடந்த 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்தார். அப்பொழுதே, தனக்குக் கொடுத்த பரிசுத்தொகையை முதுகெலும்புப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காகக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த முடிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....