Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇதற்காகத்தான் இரஷ்யாவுடன் உறவு; இந்திய நிதியமைச்சர் அமெரிக்காவில் பேச்சு!

    இதற்காகத்தான் இரஷ்யாவுடன் உறவு; இந்திய நிதியமைச்சர் அமெரிக்காவில் பேச்சு!

    உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 17 ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் இக்கூட்டங்கள் நடைபெற்றது. இரு கூட்டங்களையும் முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்படும் முன், செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பங்கேற்றார்.

    செய்தியாளர்கள் உடனான உரையாடலில், இந்தியா – அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இருதரப்பு உறவும் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இரஷ்யா – உக்ரேனியப் போருக்கு பிறகு, இரு நாட்டுக்கும் இடையில் பல்வேறு வாய்ப்புகள் அதிகளவில் வெளிப்பட்டு வருகிறது. “இரஷ்யாவைப் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் அளவீடு செய்துள்ளீர்கள், நீங்கள் எங்களுடன் நெருங்கி வருவது போல் தெரியவில்லை” என்று இந்தியாவைப் பற்றிய தனது கருத்தை அமெரிக்கா வெளிப்படையாகவே கூறியிருந்தது. இக்கருத்து முற்றிலும் தவறானது, “இவ்வாறு இல்லவே இல்லை” என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய முன்னேற்றங்கள் குறித்தும், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான காணொளி பேச்சுவார்த்தை குறித்தும் விளக்கினார்.

    பாதுகாப்பு உபகரணங்களுக்காக இரஷ்யாவுடன், இந்தியா கொண்டுள்ள உறவுகளைப் போலவே, மரபு சார்ந்த பிரச்சனைகள் இந்தியாவிற்கு உள்ளது. இரஷ்யாவுடன் எங்களுக்கு நேர்மறையான புரிதலைத் தவிர எதிர்மறையான புரிதல் இல்லை.

    அண்டை நாடுகளுடன் எப்போதும் பல பிரச்சனைகள் இந்தியாவிற்கு உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கட்டான சூழலிலும், வடக்கு எல்லையில் ஒரு வித பதற்றம் நிலவி கொண்டே தான் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் நிலவும் பயங்கரவாத பிரச்சனைகளை சரி செய்ய, இந்தியாவிலிருந்து கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் எங்களையேத் தாக்க திசை திருப்பப்பட்டது. இப்படியான பல பிரச்சனைகளை எதிர்கொள்ள தான், இரஷ்யாவுடன் இத்தகைய முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

    நாளுக்கு நாள் அமெரிக்கா உடனான இந்திய உறவு மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் நட்புறவு என்றும் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்,மீண்டும் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதமர்- என்ன சொன்னார் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....