Friday, April 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரு போன் கால் வந்தது குத்தமா? அதிர வைக்கும் காதல் கொலை.!

    ஒரு போன் கால் வந்தது குத்தமா? அதிர வைக்கும் காதல் கொலை.!

    இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சதீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் தனு குர்ரே 26 வயதுடைய இளம்பெண் வேலைபார்த்து வந்தார். இவரின் சொந்த மாவட்டம் கோர்பா ஆகும். இந்நிலையில், தனு குர்ரேவை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் காணவில்லை. 

    இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் நவம்பர் 22 ஆம் தேதி ராய்ப்பூரில் உள்ள பாண்ட்ரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

    காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் நவம்பர் 21 ஆம் தேதி ஒடிசாவைச் சேர்ந்த சச்சின் அகர்வால் என்பவருடன் பலங்கிருக்கு சென்றதாக சொல்லப்பட்டது. இதனிடையே தனு குர்ரேவின் உடல் பாதி எரிந்த நிலையில், பலிங்கர் மாவட்ட வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மீட்கப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்தனர். 

    காதலன் சச்சின் அகர்வால் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ராய்ப்பூருக்கு வந்ததாகவும், தனு குர்ரேவும் அவரும் சேர்ந்து மால் ஒன்றில் படம் பார்த்தாகவும் சொல்லப்படுகிறது. படம் பார்த்துவிட்டு இவர்கள் திரும்பியதும், தனுகுர்ரேவுக்கு பிலாஸ்பூரில் வசிக்கும் இளைஞனிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அகர்வால் தனுவிடம் சண்டை போட்டுள்ளார். பிறகு இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, மிக தந்திரமாக யோசித்த அகர்வால், காதலி தனுவை ராய்ப்பூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒடிசாவில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கொடூரமாக சுட்டு, பிறகு தனுவின் உடலை எரிக்க முயற்சி செய்ததும் விசாரணையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

    காதல் வலையில் சிக்கி பெண்கள் கொலை செய்யபப்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    தண்ணீரில் மூழ்காமல் வாக்கிங் போன பல்லி! எப்படி தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....