Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பிரேக் அப்பா? ஃபில் பண்ணாதீங்க - அரசின் புதிய முன்னெடுப்பு..

    பிரேக் அப்பா? ஃபில் பண்ணாதீங்க – அரசின் புதிய முன்னெடுப்பு..

    பிரேக்-அப்களில் இருந்து தப்பிக்க இளைஞர்களுக்கான ஒரு முன்னெடுப்பை நியூசிலாந்து அரசு எடுத்துள்ளது. 

    உலகம் முழுவதுமே பிரேக்-அப்களால் இளைஞர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நியூசிலாந்து நாடுகளில் பிரேக்-அப் நிகழ்வுகளால் அதிகளவில் இளைஞர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அந்நாட்டில், 16-24 வயதுடைய பத்து பேரில் ஆறு பேர் ப்ரேக் அப்பை சந்திக்கின்றனர். தற்கொலையும் அதிகளவில் அங்கு நடக்கின்றனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து அரசு பிரேக் அப் சார்ந்து இளைஞர்கள் பிரச்சினைகளை களைய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பிற்கு “லவ் பெட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

    இதன் மூலம், காதல் தோல்வியடையும் போது என்ன செய்வது என்பது பற்றிய ஆலோசனைகளை இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே ப்ரேக் அப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்கள், தங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கு இதன் மூலமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

    பிரேக் அப் தரும் காயத்திலிருந்து தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களில் பெரும்பாலோர் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் நியூசிலாந்து ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

    “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” – லியோ படக்குழு வெளியிட்ட தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....