Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவிவசாயிகளே இது உங்களுக்குத் தான்: இந்த மாடுகள் வளர்த்தால் உதவித்தொகை வருமாம்!

    விவசாயிகளே இது உங்களுக்குத் தான்: இந்த மாடுகள் வளர்த்தால் உதவித்தொகை வருமாம்!

    உழவுத் தொழிலுக்கு உதவியாக, விவசாயிகளுக்கு தோழனாக என்றும் தோள் கொடுப்பவை தான் மாடுகள். இன்றைய காலத்தில், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாட்டு மாடுகளின் வளர்ப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும், ஜல்லிக்கட்டு போட்டியின் மூலமாக பல நாட்டு இன் மாடுகள் அழியாமல், இன்றும் வளர்க்கப்படுகிறது. அவ்வகையில், நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு துவங்கியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில், நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் வழங்கப்படும் என, பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார். இயற்கை விவசாயம் தொடர்பான நிடி ஆயோக் தேசிய பயிலரங்கு, மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது. இதில், காணொளி வாயிலாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.

    மாநில அரசின் இயற்கை வேளாண் மேம்பாட்டு வாரியம் சார்பில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை நல்முறையில் தொடர்ந்து செய்வதற்கு, நாட்டு மாடுகள் மிக அவசியம். இதனால், விவசாயிகள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு நாட்டு மாடாவது வளர்க்க வேண்டும். அப்படி, நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளோம் என மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவித்தார்.

    இயற்கை விவசாயத்திற்கு விதைகளும், உரங்களும் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு நாட்டு இன மாடுகளும் முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டு தான், மத்தியப் பிரதேசத்தில் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் உள்ள 52 மாவட்டங்களிலும், தலா 100 கிராமங்களில் இயற்கை விவசாயம் செய்வதன் அவசியத்தையும், புரிதலையும் அறிவுறுத்தி, விவசாயிகளை ஊக்குவிக்க மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை தொடங்க உள்ளது. நம் மாநிலத்தில், இதுவரையிலும், 1.65 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும், இயற்கை விவசாய சூழலை உருவாக்க, பயிலரங்குகளும், விவசாயப் பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், நர்மதா ஆற்றின் இரு புறமும் உள்ள கரையோர வயல்களில், இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படும் என்று மத்திப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

    கோலியின் தொடர் சொதப்பல் ; வீழும் பெங்களூர்! – புள்ளிப்பட்டியலில் நேர்ந்த மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    kalashtra sexual harassment issue

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை...