Friday, March 15, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்தமிழகத்தில் மனநல ஆலோசனை பெற புதிய தொலைபேசி எண்: தொடங்கி வைத்தார் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் மனநல ஆலோசனை பெற புதிய தொலைபேசி எண்: தொடங்கி வைத்தார் மா.சுப்பிரமணியன்

    வீட்டில் இருந்தபடியே மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 14416 என்ற புதிய தொலைபேசி எண் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

    “நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்கிற புதிய தொலைபேசி வழி சேவை திட்டத்தினை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய மனநல சேவைத் திட்டத்தினை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் தொலைதூர மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மனநல ஆலோசனை மையம் மூலம் இலவச ஆலோசனைகளை பெற 14,416 என்ற புதிய தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

    இதையும் படிங்க: ‘இதுதான் குடும்ப படமோ’ – டிரெண்டாகும் வாரிசு படக்குழுவின் ‘போஸ்ட்’…

    இந்த தொலைபேசி எண் மூலம் எங்கு ,எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அங்கிருந்தபடியே தொடர்புகொண்டு மனநலம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு பயன்பற்றுக்கொள்ளலாம்.குறிப்பாக மனநலம் ஆற்றுப்படுத்தும் சேவைகள்,மனநல ஆலோசனைகளுடன் வீடியோ ஆலோசனைகள்,தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே 104 சேவைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் , நட்புடன் உங்களோடு மனநல சேவையையும் மக்களிடம் தங்கு தடையின்றி கொண்டு செல்லும் வகையில் இந்த சேவை மையத்தில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள்,20 ஆற்றுப்படுத்துனர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் ,அவர்கள் மூலமாக இலவச ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என
    மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    மேலும் விக்னேஷ் சிவன் -நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா சுப்பிரமணியம் அவர்கள் விக்கி -நயன் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் எதுவும் இல்லை.இருப்பினும் மருத்துவமனை தரப்பில் இருந்து இது சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதால்,அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! திருத்தப்பணிகள் விரைவில் துவக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....