Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்காயங்களை விரைவாக ஆற்றி விடும் மின் பிளாஸ்திரி கண்டுபிடிப்பு!

    காயங்களை விரைவாக ஆற்றி விடும் மின் பிளாஸ்திரி கண்டுபிடிப்பு!

    மருத்துவ உலகில், தற்போது பல முன்னேற்றங்களும், அதிசயங்களும் நிகழ்ந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், பல்வேறான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மருத்துவர்களுக்கு உண்டு. அறுவை சிகிச்சை எல்லாம் தற்போதைய காலத்தில், மிக எளிதாகி விட்டது என்றால், அது மிகையல்ல.

    மருத்துவத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள், இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது, புதிய கண்டுபிடிப்புகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், காயங்களை ஆற்றும் எலக்ட்ரிக் பிளாஸ்திரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மிக மெலிதான அளவு மின்சாரத்தைப் பாய்ச்சி விட்டால், நாள்பட்ட ஆறாத புண்களும், கூட விரைவாக ஆறி விடும் என்பது, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் பூர்வமான உண்மை. ஆனால் இதை நடைமுறைப்படுத்த யாரும் முன்வராத நிலையில், முதல் முறையாக நடைமுறைப்படுத்த முயற்சி செய்திருக்கிறது ‘இ-பேட்ச்’.

    உடலில் ஏற்படும் காயங்களின் மீது ஒட்டும் ‘பிளாஸ்திரி’ போல, இ-பேட்ச் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள, டெராசாகி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் தான், இந்த இ-பேட்ச்சை உருவாக்கியுள்ளனர். இந்தnew  பிளாஸ்திரி, கடற்பாசிகள் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த இ-பேட்ச், தோல் மீது பட்டால் பாதிப்பு இருக்காது. இதன் மீது, வெள்ளிக் கம்பிகளால் செய்யப்பட்ட சர்க்கியூட் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளிக் கம்பியின் ஊடாக, ஒரு மின் கலனிலிருந்து அடிக்கடி, மெல்லிய மின் துடிப்புகளை உள் செலுத்திய போது, கிட்டத்தட்ட 20 நாட்களில் குணமாகும் காயங்கள், வெறும் 7 நாட்களில் குணமாகியது. அதிலும், மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், அதிக தழும்புகள் இல்லாமல் குணமாகியது.

    எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், முதலில் எலிகள் மீது சோதனை செய்வது தான் வழக்கம். அவ்வகையில், இந்த கண்டுபிடிப்பும் முதலில், ஆய்வக எலிகள் மீது தான் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், மனிதர்களுக்கும் இதே பயன் தரும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    இது தவிர, வெள்ளிக் கம்பிகள், காயங்கள் மீது கிருமிகள் தாக்காமல் காப்பாற்றும். இ-பேட்ச் விரைவில் சந்தைக்கு வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்களை விரைவில் குணப்படுத்த உதவும். இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    இதையும் படிங்க; அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....