Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகொரோனா ஊரடங்கில் தொடர் குடியில் இறங்கிய இந்தியர்கள்; இந்த நோய் அதிகரிப்பு!

    கொரோனா ஊரடங்கில் தொடர் குடியில் இறங்கிய இந்தியர்கள்; இந்த நோய் அதிகரிப்பு!

    கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வந்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில், சிலர் வேலையை இழந்தனர். சிலர் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழ்நதனர். ஆனால், இன்னும் சிலரோ மதுக் குடித்து, குடித்து தங்களின் கல்லீரலையே இழந்துள்ளனர்.

    ஊரடங்கில், இடைவிடாது தொடர்ந்து மது அருந்தி வந்த காரணத்தால், இந்தியர்களின் கல்லீரல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. கொல்கத்தாவில் இருக்கும் இந்திய கல்லீரல் மற்றும் செரிமான நோய்களுக்கான நிறுவனத்தில் பணிபுரியும் இரப்பை குடல் மருத்துவர் செளவிக் மித்ரா இது பற்றி கூறுகையில், கொரோனாப் பரவலின் போது NAFLD-ன் நிகழ்வுகள், 10 – 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போது, அதிகரித்த உடல் பருமன் மற்றும் உட்கார்ந்தே இருந்த வாழ்க்கை முறை ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது.

    மது குடிப்பதால் ஏற்படும் கல்லீரல் நோய்களில், கணிசமான அதிகரிப்பு இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனாலும், இதை ஒரு எண்ணிக்கையோடு நிறுத்துவது தான் கடினம். பலர் கொரோனா தடுப்பூசிகளை போடாமல் தவறவிட்டதால், ஹெபடைடிஸ் ஏ நோயும் அதிகரித்து வருகிறது.

    2020 முதல் 2023 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மது குடித்தல் அதிகரித்துள்ளது. இதில், 100-க்கும் அதிகமான கூடுதல் இறப்புகளும், 2,800 கூடுதல் சிதைந்த சிரோசிஸ் நோய்கள் ஏற்படவும் வழி வகுத்துள்ளது. அதேசமயம் ஒரு ஆண்டிற்கும் மேலாக, மது குடிப்பதினால், நோயுற்ற தன்மை அதிகரித்து, இறப்புக்கும் வழிவகுக்கிறது என்று மருத்துவர் செளவிக் மித்ரா தெரிவித்துள்ளார்.

    இன்றைய இளம் தலைமுறையினர் இடையே மதுப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இப்பழக்கத்தை இப்போதே கைவிடுங்கள். அதுவே, உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    இதையும் படிங்க; ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த துயரச்சம்பவம் ; ஒருவர் பலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....