Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு புதிய வழக்கு!

    சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு புதிய வழக்கு!

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் நாளான அன்று ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக நரேஷ் என்பவரை அதிமுகவினர் பிடித்தனர். பிடித்த அந்த நபரை அதிமுகவினர் ஜெயக்குமார் அவர்களின்  முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். 

    அச்சமயத்தில்  பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நரேஷ் அவர்களை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிகழ்வு காணொளியாக்கபட சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி வைரலானாது.

    அதிமுகவினரின் தாக்குதலில் காயமடைந்த நரேஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுக உறுப்பினர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பெயரில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பிப்ரவரி 21 இரவு 8:30 மணிக்கு ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். ஜெயக்குமாரை அன்று நள்ளிரவு 12:00 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர், காவல்துறையினர்.

    அப்போது, ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட, ஜெயக்குமார் அவர்களை மார்ச் 7ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

    ஏற்க்கனவே சிறையில் உள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் மீது இன்று மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் மட்டும் அன்றி பொதுமக்களிடத்திலும் பேசு பொருளாய் மாறி இருக்கிறது.

    jayakumar

    இப்புதிய வழக்கில் தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகசென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று ஜெயக்குமார்  ஆஜர்படுத்தப்பட்டார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயக்குமார் அவர்களை வைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே மார்ச் ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டவர் தற்போது இரண்டு நாட்கள் கூடுதலக ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....