Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்" - பகாசூரன் குறித்து மோகன்.ஜி பேச்சு

    “திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்” – பகாசூரன் குறித்து மோகன்.ஜி பேச்சு

    பகாசூரன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி கருத்து தெரிவித்துள்ளார். 

    இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி போன்றோரின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம்த்தான், பகாசூரன். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”பகாசூரன் திரைப்படம் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகிறது. திரையரங்குகளில் நிறைய பேர் சென்று பார்த்தீர்கள். பெரியவர்கள்தான் சென்று பார்த்தீர்கள். இளையோர் யாரும் சென்று பார்க்கவில்லை. அதற்குக் காரணம் திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். படம் குறித்து தவறான விமர்சனங்கள் பரவின. அமேசான் ப்ரைமில் வந்த பிறகு இன்று பலரும் படத்தை கொண்டாடுகிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். 

    இந்தப் படம் உங்களுக்கு பொறுமையாக செல்லலாம்.பிடிக்காத விஷயங்கள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி தேவையான கன்டென்ட் இந்தப் படம். அண்மையில் சர்ச் பாஸ்டர் ஒருவர் பிரச்சினையில் சிக்கினார். சென்னையில் கல்லூரியில் பெண் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டடது என பல பிரச்சினைகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

    மேலும், இந்தப் படம் ஒரு விழிப்புணர்வு. குடும்பமாக சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பிரச்சினைகளை பேசி தீர்த்துகொள்ள முடியும். அவார்டுக்காக இந்தப் படம் எடுக்கவில்லை. திரௌபதி போல சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த எடுத்த படம் இது” என்று தெரிவித்துள்ளார். 

    கரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் சம்பவ இடத்திலேயே பெண் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....