Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்இணையத்தில் வைரலான விக்னேஷ் சிவன் - நயன்தாரா காணொளி; 'க்யூட் சொல்லும்' நெட்டிசன்கள்!

    இணையத்தில் வைரலான விக்னேஷ் சிவன் – நயன்தாரா காணொளி; ‘க்யூட் சொல்லும்’ நெட்டிசன்கள்!

    தமிழ் சினிமாவின் லேடீஸ் சூப்பர்ஸ்டார் என்று அன்போடு பலராலும் அழைக்கப்படும் நடிகைதான் நயன்தாரா. ஐயா திரைப்படத்தில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நயன்தாரா அவர்கள் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

    nayantharaபோடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கிய அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் நயன்தாரவும் காதலித்து வருவது பலரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இன்று காதலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    காதலர் தினம் வந்தாலே சிறகடிக்கும் இணைகளின் மனதிற்கு தேவையெல்லாம் காதலை பரிமாறிக்கொள்வதுதான். இதற்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் விதி விலக்கு அல்ல. ஆம்! எப்போதும் உள்ளுக்குள் சிறகடிக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக இன்று நயன்தாரா அவர்கள், விக்னேஷ் சிவன் அவர்களுக்கு பூங்கோத்து அளித்து, அவரை அணைத்தபடி காதலை பரிமாற்றியுள்ளார்.

    இந்த பரிமாற்றம் காணொளியாக எடுக்கப்பட அவை இணையத்தில் தற்போது வைரலாகி பலரையும் ஈர்த்துள்ளது. வெறுமனே 18 வினாடிகளுக்கும் குறைவாக உள்ள அந்த காணொளியை கண்டு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், காண்பதற்கு இனிமையாக இருக்கிறதென்றும் கூறி வருகின்றனர்.

    nayanthara

    மேலும், இந்த காணொளியை முதலில் பதிவிட்ட விவிக்னேஷ் சிவன் அவர்கள், “அவள் வந்து உன்னிடம் முதல் முறையாக பூங்கோத்தை தருவதைப் போன்றே இம்முறையும் தந்தால் அது நிச்சயம் ஆனந்தமான காதலர்கள் தினம்தான்” என்று பதிவிட்டுள்ளது..பலரையும் க்யூட் என்று சொல்லவைத்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....