Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்“நீங்கள் இந்தியாவிற்கே செல்லுங்கள்” - முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மகளின் கருத்தால் பரபரப்பு!

    “நீங்கள் இந்தியாவிற்கே செல்லுங்கள்” – முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மகளின் கருத்தால் பரபரப்பு!

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் பொருளாதார விதிமீறல் நடந்ததாக கூறி, அவரது கூட்டணி கட்சிகளே அவரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில் வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கலைந்ததாக அறிவிப்பு வெளியானது. மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கானே நீடிப்பார் என ஆளுநர் கூறினார். 

    மேலும் இதில் நாடாளுமன்றம் தனிச்சையாக தலையிட்டு விசாரணை நடத்தியது. இதற்கு உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், ஆளுநர் அறிவித்த செல்லாது எனவும் தெரிவித்தது. மேலும் முறையாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்திரவிட்டது. 

    இது ஒருபுறம் இருக்க, நேற்று இம்ரான் கான் மக்களின் முன்னிலையில் இந்தியாவை பற்றி சற்று பெருமையாக பேசினார். அவர் பேசுகையில், “இந்தியாவை எந்த வல்லரசு நாடுகளும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்தியர்கள் என்றும் சுயமரியாதை கொண்டவர்கள். ஆர்எஸ்எஸ் சிந்தாந்த கொள்கையால் நான் மிகவும் அதிருப்தி அடைத்துள்ளேன். காஷ்மீரில் மாநில அந்தஸ்து ரத்து என்பதால் தான் இந்தியா பாகிஸ்தானிடையே நல்லுறவு இல்லை. இரு நாடுகளும் ஒன்றாகவே சுதந்திரம் பெற்றன. ஆனால் பாகிஸ்தான் வெளிநாடுகளால் டிஷ்யூ பேப்பர் போன்று பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது” என்றார். 

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் கருது ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    “பதவி பறிப்போனதால் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் போன்று புலம்பிக் கொண்டிருப்பவருக்கு யாரவது சொல்லுங்கள், அவர் சொந்தக் கட்சியினராலே தூக்கி எறியப்பட்டார். வேறு யாரும் அவரைத் தூக்கி எறியவில்லை” என்று மர்யம் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், “இம்ரான் கானுக்கு இந்தியாவைப் பிடித்துவிட்டால் பாகிஸ்தானைவிட்டு இந்தியாவிற்கே செல்லலாம். பதவி பறிபோனதால் இப்படி அழுது புலம்பும் நபரை நான் இப்போது தான் காண்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

    மேலும், இன்று நாடாளுமன்றம் கூடியது. அதில் சபாநாயகர் ஆசாத் கெய்சர் பேசத் தொடங்கினார். அப்போது அவர், பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி ஏதும் உள்ளதா என விவாதிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் ஷெரிப், இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

    மேலும் நவாஸ் ஷெரிப் அவர்கள், “பாகிஸ்தானின் அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மமூத் குரேஷி, எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் முறியடித்துக் காட்டுவோம் என தெரிவித்தார். இதையடுத்து அவையானது 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....