Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்குழந்தைகளுக்கு இயற்கையான வண்ணங்களை பயன்படுத்த சொல்லி கொடுங்களேன்..!

    குழந்தைகளுக்கு இயற்கையான வண்ணங்களை பயன்படுத்த சொல்லி கொடுங்களேன்..!

    பொதுவாக நாம் செயற்கையான மூலப் பொருள்களைப் பயன்படுத்தி தான் ஓவியங்கள் வரைவோம் சரிதானே… அப்படிச் செய்வது சுலபமாக இருந்தாலும் அவை நல்லதல்லவே… நம் முன்னோர்கள் எப்படி அந்த காலத்தில் இயற்கையான நிறங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்திருப்பார்கள். அது அழகாகவும் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது. பழங்காலத்தில் நம் தமிழர்கள் இந்த முறைகளைப் பயன்படுத்தி தான் அழகான மற்றும் கலைநயம் மிக்க ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.  

    குறிப்பாக சிறு பிள்ளைகள் எப்போதும் வரைதல், ஆடுதல், பாடுதல், விளையாடுதல் போன்றவற்றில்தான் அதிக ஈடுபாடுகளைக் கொண்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு இயற்கையான மற்றும் புதுவிதமாக செய்தால் மிகவும் பிடிக்கும். 

    இயற்கையில் கிடைக்கும் மூலப் பொருள்களை வைத்தே அழகான ஓவியங்களையும் கலைகளையும் சொல்லிக் கொடுக்கலாம். 

    • மரம் வரைந்து அதற்கு பச்சை வண்ண இலைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம். பழுப்பு நிறத்திற்கு மண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். 
    • மஞ்சள் நிறத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தலாம். 
    • கருப்பு நிறத்திற்கு மையைப் பயன்படுத்தலாம் அல்லது கரித்துண்டுகளையும் பயன்படுத்தலாம்.  
    • இளஞ்சிவப்பிற்கு ரோஜா இதழ்கள் அல்லது பட்டு ரோஜா என்று அழைக்கப்படும் சிறிய வகை அழகு செடிகளின் பூவைப் பயன்படுத்தலாம். 
    • சிவப்பு நிறத்திற்கு பீட்ரூட்டைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம். 
    • இயற்கையாக கிடைக்கும் காய்கள், கனிகள், பூக்கள்  போன்றவற்றின் தோல்களைக்  காயவைத்து போடி செய்தும் வண்ணம் தீட்டலாம். சில பொருள்களை நேரடியாகவும் பயன்படுத்தலாம். 

    இப்படி செய்வது நமது பாரம்பரியத்தையும் புது மாதிரியான செயல்களைக் குழந்தைகள் ஆர்வமுடன் செய்வதையும் ஊக்குவிக்கும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....