Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாடு தழுவிய வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி!

    நாடு தழுவிய வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி!

    நாட்டில் உள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பொருளாதர கொள்கைகளை மாற்றுதல், பெட்ரோல் மீதான கலால் வரியைக் குறைத்தல், விலைவாசிக் குறைத்தல் போன்ற 12 கோரிக்கைகளை வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்திய அரசை கண்டித்து இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இன்று முதல் இரண்டு நாட்கள் இந்தப் போராட்டம் தொடரும் என்று தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் 12 கோரிக்கைகளை வைத்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பொது மக்கள் பயணிக்கும் பேருந்துகள், ஆட்டோ, இரயில் போன்ற போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    சி.ஐ.டி.யு மற்றும் ஏ.ஐ.டி.யு.சி போன்ற தொழிற்சங்கங்களும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் தொழிற் சங்கங்களின் கீழ் உள்ள தமிழக போக்குவரத்து பணியாளர்களும் போராட்டத்தில் கலந்துக் கொள்வதால் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. மிகவும் முக்கியமாக மத்திய அரசின் கீழ் வரும் தொழில்துறை நிறுவனங்கள், எல் ஐ சி மற்றும் வங்கி நிறுவனங்கள் என பல தொழிற் சங்கங்கள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். 

    100 சதவிகித பேருந்துகளில் 10 சதவிகிதத்திற்கும் கீழ் இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசுப் பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்த நிலையில் பேருந்துகள் ஓடாமல் இருப்பதால் பொது மக்களை இப்போராட்டம் அதிகம் பாதித்துள்ளது. 

    மேலும் தலைநகரான சென்னையில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை என்பதால் அலுவலக வேலைக்கு செல்லும் பொது மக்கள் காலை முதலே பேருந்துகளுக்காக காத்திருந்தனர். தொழிற் சங்கங்களுக்கு கீழ் வரும் ஆட்டோக்களும் ஓடாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இன்று மற்றும் நாளை வேலைக்கு வரமால் இருக்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தெரிவித்திருந்தது. முன்பே தெரிவித்து எடுக்க இருந்த பணியாளர்களின் விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது. அதையும் மீறி இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    நாளையும் போராட்டம் தொடரும் என்பதால் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....