Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்மாணவர்களுக்கான ஏவுகனைச் சவால்களை அறிவித்துள்ளது நாசா

    மாணவர்களுக்கான ஏவுகனைச் சவால்களை அறிவித்துள்ளது நாசா

    2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஏவுகனைச் சவால்களை அறிவித்துள்ளது நாசா. இந்த சவால்கள் நேரடியாகவும் மெய்நிகர் (virtual) மூலமும் மாணவர்களுக்கு வாய்ப்புகளைத் தருகிறது.

    நேரில் வர விருப்பம் உள்ளவர்களுக்கு ஹன்ட்ஸ்வில்லே அலபாமாவில் ஏப்ரல் 22  மற்றும் 23 தேதிகளில் ஏவுகனைச் சோதனை நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மழை காரணமாக ஏப்ரல் 23 மற்றும் 24 நான்கு தேதிகளில் ஒப்பனை நாள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றாக ஹோம் சாலேன்ச் மைதானத்தில் இறுதி சோதனைகளை நடத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமேரிக்கா முழுவதிலும் உள்ள பள்ளிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மாணவர்களுக்கும், 4000 முதல் 6000 அடி வரை பேலோட் அமெச்சூர் ராக்கெட்டுகளை வடிவமைத்தல், உருவாக்குதல், சோதனைச் செய்தல், மேலும் பறக்க விடலாம் எனவும் நாசா இச்சவாலை அறிவித்துள்ளது.nasa student launch competition 2022

    இதில் பங்கு பெரும் குழுக்கள் ராக்கெட்டுகளை உருவாக்கும் போது  நாசா நிபுணர்களுடன் இணைந்து பல்வேறு ஆவணங்களையும் சோதனைகளையும்  சந்திக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, வடிவமைப்பு, பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் என கிட்டத்தட்ட பன்னிரண்டு வகைகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் மதிப்பெண்களை பெற வேண்டும்.

    இந்த ஆண்டு போட்டியானது மெய்நிகர் (virtual) துவக்கமாகக் கொண்டிருக்கும் எனவும் அனைத்து குழுக்களுக்கும் மெய்நிகர் (virtual) மூலம் கண்காட்சிகள், சுற்றுலா காட்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகள் போன்றவை நாசாவின் நிபுணர்களால் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நேரில் கோவிட் 19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்டே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....