Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநம்ம ஊர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

    நம்ம ஊர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

    பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கவும் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டியும் ‘நம்ம ஊர் திருவிழா’ பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக சனவரி மாதம் நடத்த முடியவில்லை என்பதால் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. அதனால் நேற்று திங்கட்கிழமை மாலை ஆறுமணிக்கு இத்திருவிழா கோலாகலமாக சென்னையில் உள்ள தீவுத் திடலில் நடைப்பெற்றது. 

    இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று நடனம், பாட்டு, இசை என அனைத்து விதமான தமிழ்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தினர். 

    தமிழ்த்தாய் வாழ்த்து இசையை சென்னை அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் பாடி தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து மங்கள இசையை ஆனந்தன் குழுவினர் இசைத்தனர். இதையடுத்து கட்டைக்கூத்து திருவண்ணாமலை குமார் குழுவினரும் கொம்பு இசை மதுரை தட்சணா மூர்த்தி குழுவினரும் பெரிய மேளம் திருவண்ணாலைமலை முனுசாமி குழுவினரும் அடுத்தடுத்து இசையையும்  நடனத்தையும் மக்களின் மனதில் பதிய வைத்தனர்.

    மேலும் இத்திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை,புலியாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், கரக ஆட்டம், நையாண்டி மேளம், தோல்பாவைக் கூத்து, தெருக்கூத்து, துடுப்பு மேளம், மகுடம் போன்ற தமிழரின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

    சின்னப் பொண்ணு, வேல்முருகன் ஆகியோர் இணைந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர். டிரம்ஸ் சிவமணி இசையும் கலைக்கட்டியது. கானா பாலா பாடிய கானா பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடனங்கள் பலவற்றை பிருந்தா நடன இயக்குனர் நடத்தினார். 

    நம்ம ஊர் திருவிழா’ தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக நடத்தப்பட்டது. இதனை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார், மேலும் சுற்றுலாத் துறை மதிவேந்தன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் சேகர் பாபுவும் சிறுபான்மைத் துறை அமைச்சர் செங்கம் மஸ்தான் ஆகியோரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தினர். 

    இந்த திருவிழாவிற்கு அனுமதி இலவசம் என்பதால் பலரும் குடும்பத்துடன் இணைந்து வந்து திருவிழாவில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கலைத்துறை பெருமக்களுக்கும் இது பெரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் ‘நம்ம ஊர் திருவிழா’ தமிழகத்தின் கலைகள் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....