Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெளிநாட்டு தொடர்களில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி; நெகிழ்வான நிமிடங்கள் உள்ளே!

    வெளிநாட்டு தொடர்களில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி; நெகிழ்வான நிமிடங்கள் உள்ளே!

    2022ஆம் ஆண்டுக்கான ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் பி பிரிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல்கணக்கில் ஈராக் ஏர்ஃபோர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்திய கிளப் அணி ஒன்று வெளிநாடுகளில் நடக்கும் தொடரில் வெற்றியை பெறுவது இதுவே முதல் முறை ஆகும். 

    சவுதி அரேபியாவில் உள்ள கிங் ஃபகத் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இந்தியன் சூப்பர் லீக்கில் ஷீல்டு மற்றும் கோப்பையை வென்ற  மும்பை சிட்டி எஃப்சி அணியும், ஈராக்கின் ஏர்ஃபோர்ஸ் அணியான அல் குவா அல் ஜாவியா அணியும் மோதிக்கொண்டன. 

    இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதியில் ஈராக் எர்போர்ஸ் அணியின் ஹம்மாதி அகமத் 59வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆட்டம் ஈராக் அணியின் பக்கம் சென்று கொண்டிருந்த நிலையில், மும்பை சிட்டி எஃப்சி அணியைச் சேர்ந்த டியாகோ மாரிசியோ 70வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 

    ஈராக் அணியினர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு ராகுல் பெக்கே ஒரு கோல் அடித்து அடுத்த அதிர்ச்சியை அளித்தார். இதனால் ஆட்டம் 2-1 என மும்பை சிட்டி எஃப்சி அணி பக்கம் சென்றது. எவ்வளவோ கடுமையாக முயற்சி செய்தும் ஈராக் எர்போர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. போட்டியின் முடிவில்  மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வெளிநாட்டு தொடர்களில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. 

    இதற்கு முந்தைய போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி , அல் சகாப் அணியிடம் 0-3 என்ற கோல்கணக்கில் படுதோல்வி அடைந்து இருந்தது. இந்த வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கையும், புது உத்வேகத்தையும் அளிக்கும். 

    ஈராக் ஏர்ஃபோர்ஸ் அணிக்கு 9வது நிமிடத்திலேயே ஒரு கோல் கிடைத்திருக்க வேண்டியது. அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஆலா அப்பாஸ் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆனால், அந்த அணியின் முன்கள ஆட்டக்காரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் 9வது நிமிடத்தில் அடித்த பந்தை  மும்பை சிட்டி எஃப்சி அணையின் கோல்கீப்பர் புர்பா லச்சென்பா அற்புதமாக தடுத்து நிறுத்தினார். 

    அதே போல், 79வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக்கை, மும்பை சிட்டி எஃப்சி அணியின் தடுப்பாட்டக்கார் ராகுல் பெக்கே லாவகமாக ஹெட்டர் மூலம் கோலாக மாற்றினார். ஈராக் எர்போர்ஸ் அணியின் ஒருசில தவறுகளும்,  மும்பை சிட்டி எஃப்சி அணியின் சிறப்பான ஆட்டமும் ஒன்றாக சேர்ந்து இந்த வெற்றியை  மும்பை சிட்டி எஃப்சி அணியினரின் கைகளில் சேர்த்துள்ளது. 

    மும்பை சிட்டி எஃப்சி அணி தன்னுடைய அடுத்த ஆட்டத்தில் அல் ஜஸிரா அணியை நாளை இதே மைதானத்தில் சந்திக்கிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....