Thursday, April 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுமா? - வெளிவந்த தகவல்

    புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுமா? – வெளிவந்த தகவல்

    தற்காப்பு கலை வீரரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    உலகளவில் குங்ஃபூ தற்காப்பு என்றால் பலருக்கும் முதலில் நியாபகம் வரும் பெயர் புரூஸ் லீ. தற்காப்பு கலை வீரராக போற்றப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த திரைப்படங்களுக்கு இன்றளவும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். 

    1940 ஆம் ஆண்டு நவம்பர் 27-இல் பிறந்த புரூஸ் லீ 1973-ஆம் ஆண்டு ஜூலை 20-இல் காலமானார். 32 வயதிலேயே புரூஸ் லீ இறந்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதைத்தொடர்ந்து, புரூஸ் லீ இறப்பில் மர்மங்கள் உள்ளதாக பேசப்பட்டது. மருத்துவர்களும் தெளிவான அறிக்கை எதுவும் தராத நிலையில், இவரது மரணம் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்தது. 

    இந்த குழப்பத்திற்கு சமீபத்தில்தான் காரணம் உறுதிப்பட தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவரது சிறுநீரகத்திலிருந்த அதிகப்படியான நீர் வெளியேற்ற முடியாமல் போனதே அவரது மரணத்திற்கு காரணம் என மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டது. 

    இன்றளவும் புரூஸ் லீ திரைப்படங்களை ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில், புரூஸ் லீயின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வபோது இப்படியான தகவல்கள் வெளிவருவதாகவும், மறைவதாகவும் இருந்தது. 

    ஆனால், இம்முறை அப்படியில்லை என்று நம்பப்படுகிறது. புரூஸ் லீயின் வாழ்க்கைப் பயணத்தை ஆஸ்கர் விருது வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தை இயக்கிய ஆங் லி இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    மேலும், இத்திரைப்படத்தில் ஆங் லியின் மகன் மசோன் லீ புரூஸ் லீ கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தப் படத்தைத் தயாரிக்க சோனி நிறுவனம் முன்வந்துள்ளது.

    இதுகுறித்து, இயக்குநர் ஆங் லி தெரிவிக்கையில், “கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் தற்காப்பு கலையை பிரபலப்படுத்தியவர் புருஸ் லீ. அவரது கடின உழைப்பை நிஜத்தில் கொண்டு வர உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

    புரூஸ் லீயின் வாழ்க்கைப் பயண திரைப்படம் சார்ந்த செய்திகள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பலரிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவே நடுங்கிய அந்த நாள்; மும்பை டைரீஸ் 26/11

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....