Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தொடர்ச்சியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்பட அறிவிப்புகள்; ஜாலியான விஜய் ரசிகர்கள்!

    தொடர்ச்சியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்பட அறிவிப்புகள்; ஜாலியான விஜய் ரசிகர்கள்!

    தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரையில் வந்து ரசிகர்களை மகிழ வைக்க காத்திருக்கும் திரைப்படம்தான் பீஸ்ட். இதுவரையில் இல்லாத அளவிற்கு பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பென்பது உள்ளது. இம்முறை விஜய் அவர்களை எப்படியான கதாப்பாத்திரத்தில் பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் விஜய் ரசிகர்களிடத்தில் மட்டும் அல்லாது நடுநிலை ரசிகர்களிடத்தும் அதிகம் காணப்படுகிறது.

    கோலமாவு கோகிலா திரைப்படத்தில் எவரும் எதிர்ப்பாரா வண்ணம் நயன்தாராவையும், டாக்டர் திரைப்படத்தில் மாறுபட்ட சிவகார்த்திகேயனையும் வெளிக்காட்டிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார், பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்யை எப்படி காட்டப்போகிறார் என்ற ஆவல் எழுவது இயல்புதானே!

    பீஸ்ட் திரைப்படத்திற்கு முன்பு வெளிவந்த விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தில் தனது வழக்கமான கதாப்பாத்திர வடிவமைப்புகளில் இருந்து சற்று விலகி நடித்திருப்பார், தளபதி விஜய். மாஸ்டர் திரைப்படத்தில் ஜேடி(JD) யாக விஜய் அவர்களின் கதாப்பாத்திரம் பலரையும் கவர்ந்தது. விஜய் அவர்களை பிடிக்காதவர்களுக்கு கூட ஜேடி கதாப்பாத்திர வடிவமைப்பு பிடித்திருந்தது. 

    தற்போது, பீஸ்ட் திரைப்படத்திலும் தளபதி விஜய் அவர்களின் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும்படியாக இருக்கும் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், முந்தைய திரைப்படங்களில் இருந்து விலகிய கதாப்பாத்திரமாகவே விஜய் அவர்களின் கதாப்பாத்திரம் பீஸ்ட் திரைப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட்-டின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றிலும் விஜய் அவர்களின் கதாப்பாத்திரம் கவரும் தன்மை கொண்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். 

    beast

    இப்படியாக பீஸ்ட் திரைப்படத்தின் கதைக்களத்தை விடவும், திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களின் கதாப்பாத்திர வடிவமைப்பு குறித்து தொடர்ந்து ஆவலும் எதிர்ப்பார்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளன. இப்படியாக தொடர்ந்து ரசிகர்களிடத்தில் எழும்பிக்கொண்டிருக்கும் எதிர்ப்பார்ப்பின் பதிலை நாம் அனைவரும் அறியப்போகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்! இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படமானது ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஜாலியோ ஜிம்கானா மனநிலையை உணர்ந்து வருகின்றனர்.

    மேலும், பீஸ்ட் திரைப்படம் தணிக்கைக் (censor) குழுவின் பார்வைக்கும் சென்று வந்துவிட்டது. அதன்படி, யு/ஏ (U/A) சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் கால அளவானது இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்களாக உள்ளது. இப்படியான தொடர் அறிவிப்புகளால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர், விஜய் ரசிகர்கள்!

    ஏப்ரல் 13-இல் திரையரங்குகளில் விஜய் ரசிகர்களின் பீஸ்ட் மோடை (beast mode) நாம் காணலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இதையும் படிங்க;

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....