Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் 11-ஆவது நாளாக பால் தட்டுப்பாடு; இன்னலில் பொதுமக்கள்

    புதுச்சேரியில் 11-ஆவது நாளாக பால் தட்டுப்பாடு; இன்னலில் பொதுமக்கள்

    புதுச்சேரியில் 11-வது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பால் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

    புதுச்சேரி மாநில மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால், ‘பாண்லே’ நிறுவனத்தின் பாலாகும். இந்த நிறுவனத்தின் ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் மக்களின் தேவையாக இருக்கிறது. அதே சமயம், கடந்த மாதம் 80 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பால் இல்லாமல் தவித்தனர். 

    இதனிடையே, வெளிமாநிலங்களிலும் பால் வாங்க முடியாத சூழ்நிலை உருவானது. வெளிமாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்ந்து இருந்ததால் கூடுதல் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வெளிமாநிலங்களில் பால் கொள்முதல் செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு இடையே மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறது.  

    இந்நிலையில், புதுச்சேரியில் 11-வது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் விநியோகம் செய்யும் பகுதிகளுக்கு வழங்கப்படும் பால் அளவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சற்று நேரத்திலேயே பால் விற்பனை முடிந்து விடுகிறது. இதனால், மக்கள் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

    சிவகார்த்திகேயன் செய்யும் உதவிகள் – பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....