Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஅனைவருக்கும் பிடித்த வகையில் 'மூங் தால் சாலட்' செய்வது எப்படி?

    அனைவருக்கும் பிடித்த வகையில் ‘மூங் தால் சாலட்’ செய்வது எப்படி?

    மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான மூங் தால் சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்:-

    பாசிப் பருப்பு நன்மைகள்: ஒரு வகை தாவர வகையை சேர்ந்தது தான் பாசிப்பயறு பருப்பு ஆகும். இதனை சிறுபருப்பு, பயத்தம்பருப்பு, பச்சைப்பயறு மற்றும் சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. ‘Moong Dhal’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த பாசிப்பயறு பருப்பு இந்தியாவில் பண்டைய காலம் முதலே விளைவிக்கப்பட்டுகிறது.

    பாசிப்பருப்பு

    இதில், அதிகளவு வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, கனிமச்சத்துக்களான கால்சியம், மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. மேலும், இதனை உடல் எடையை குறைக்க அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள புரோட்டின் மற்றும் நார்ச்சத்துகள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.

    மேலும், 24% புரோட்டின் மற்றும் 63% கார்பொஹைட்ரெட் உள்ளது. கர்ப்பிணிபெண்கள் கருவில் உள்ள குழந்தைக்கு செல்லும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    • 3/4 கப் பாசிப் பருப்பு
    • தேவையான அளவு எண்ணெய்
    • தேவையான அளவு கறிவேப்பிலை
    • பச்சை மிளகாய் – 1
    • ஒரு சிட்டிகை பெருங்காயம்
    • கடுகு – 1 தேக்கரண்டி
    • தேவையான அளவு உப்பு
    • 1/2 கப் துருவிய தேங்காய்
    • தேவையான அளவு கொத்தமல்லி இலை
    • எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
    • பெரிய வெங்காயம் – 1/2
    • தக்காளி – 1

    செய்முறை:

    பாசிப் பருப்பு

    ஒரு மணி நேரதிற்கு முன்பே பாசிப்பருப்பை ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பின்னர், ஊறவைத்த பாசிப்பருப்பில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டி அதில் சேர்க்க வேண்டும். மேலும், அந்த பாத்திரத்தில் அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இறுதியில், கொத்தமல்லி இலை, தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து கிளறவும்.

    தேவையான அனைத்து பொருட்களையும் செய்த பின்னர் மூங் தால் சாலட் தயாராகிவிடும். இதனை, மாலை நேரம் குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக குடுத்து வர ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....