Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய சூப்பர் அப்டேட் - டிக்டாக்கு போட்டியாக மாறும் ஃபேஸ்புக்!!!

    மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய சூப்பர் அப்டேட் – டிக்டாக்கு போட்டியாக மாறும் ஃபேஸ்புக்!!!

    மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக்கில் டிக்டாக்கு போட்டியாக ‘ரீல்ஸ்’ அதாவது 30 நொடிகளுக்கும் குறைவான வீடியோக்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

    facebook-

    18 ஆண்டுகளில் ஃபேஸ்புக்கின் தினசரி பயனாளர்களின்(Daily Users) எண்ணிக்கை முதல் முறையாக 2021 ஆண்டில் குறைந்துள்ளது. இப்போதும் ஏற்றத்தில் இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்து, அமெரிக்கப் பங்குச்சந்தையில் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டது.

    சமூக வலைதளமான ஃபேஸ்புக்குக்குப் போட்டியாக இருப்பது, சீனாவைச் சேர்ந்த பைட்டானஸ் நிறுவனத்தின் டிக்டாக் தான். இது, 2020-ல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த டிக்டாக் தான் உலக அளவில் முன்னணியாக திகழ்ந்த ஃபேஸ்புக்குக்கு ‘டஃப் பைட்’ கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    facebook-user

    உலக அளவில் கடந்த ஆண்டுகளில் பிரபலமானவை குறுகிய வீடியோக்கள்(Shorts Video). அதாவது, 30 நொடிகளுக்கும் குறைவான வீடியோக்கள். இது, சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி உள்ளனர். டிக்டாக்கை மையமாக கொண்டு இதனை பல புதிய நிறுவனங்களும் ஷார்ட் வீடியோக்களை ஷேர் செய்யும் வகையிலான செயலிகளை உருவாக்கியுள்ளனர்.

    ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களும் தங்கள் செயலிகளில் பயன்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபிலும் ஷார்ட் வீடியோக்களை ஷேர் செய்யும் வகையில் புதிய வசதியை அளித்துள்ளனர்.

    facebook reel

    இந்தநிலையில், ஃபேஸ்புக்கின் சமீபத்திய வீழ்ச்சியினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஷார்ட் வீடியோக்களையே கையில் எடுத்திருக்கிறது மெட்டா நிறுவனம். இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரீல்ஸ் வசதியை ஃபேஸ்புக்கிலும் அறிமுகப்படுத்துகிறது மெட்டா நிறுவனம்.

    ஷார்ட் வீடியோவை பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது, உலகின் 150 நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக மெட்டா அறிவித்துள்ளது. மேலும், பயனர்கள் ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தில் பாதி நேரத்தை வீடியோக்களிலேயே செலவிடுகின்றனர். எனவே, ஷார்ட் வீடியோக்கள் மூலம் பணம் ஈட்ட புதிய வழிகளை அறிமுகப்படுத்தியிருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....