Tuesday, May 16, 2023
மேலும்
  Homeஆன்மிகம்இந்த கோவிலுக்குள் சென்ற பிறகு யாரையும் தொடக்கூடாதாம்! - தகவல்கள் உள்ளே!

  இந்த கோவிலுக்குள் சென்ற பிறகு யாரையும் தொடக்கூடாதாம்! – தகவல்கள் உள்ளே!

  மெஹந்திபூர் பாலாஜி கோயில் (Mehandipur Balaji Temple):

  மெஹந்திபூர் பாலாஜி மந்திர் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்து மதம் சார்ந்த கோயில் ஆகும். ராஜஸ்தானின் காரயூலி (Karauli) மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலின் பிரதான தெய்வம் அனுமன்.

  இந்தியாவின் பல பகுதிகளில், ஹனுமானை பாலாஜி (மரியாதைக்குரிய பையன் என்று பொருள்) என்றும் மக்கள் அழைக்கின்றனர், ஏனெனில் இறைவனின் குழந்தை பருவ வடிவம் குறிப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது. இந்த கோயில் பாலாஜிக்காக (அனுமன் ) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

  இந்த கோயிலின் முதன்மை அம்சம் என்னவெனில், மனிதர்களின் மீது ஏற்படும் தீய சக்திகளை ஒழித்தால் மற்றும் பேயோட்டுதல் போன்றவை ஆகும்.

  2. உலக அளவில் புகழ்பெற்ற மெஹந்திபூர் பாலாஜி கோயில்:

  மெஹெந்திபூர் பாலாஜி கோயில் உலகம் முழுவதும் புகழ்பெற்றதற்கான முக்கிய காரணங்கள்:

  இங்கு மந்திர எழுத்துக்கள், (மந்திர எழுத்துக்கள் என்பது யாரோ அல்லது ஏதோவொன்றில் மந்திரத்தைப் பயன்படுத்துவது. ஒருவருக்கு தீங்கு செய்ய அல்லது அவரை மகிழ்விக்க இது செய்யப்படுகிறது.) சூனிய நடவடிக்கைகள், மனிதர்களின் வியாதிகளை குணப்படுத்துதல் மற்றும் தீய சக்திகளினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும் பேயோட்டுதல் போன்ற செயல்கள் உண்மையான முறையில் இங்கு நடைபெறுகின்றன.

  2013 ஆம் ஆண்டில், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாட்டில் இருந்து எய்ம்ஸ் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் மற்றும் மனநல மருத்துவர்கள் கொண்ட குழு இக்கோயிலின் செயல்பாடுகளை பற்றி விரிவாக மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சியை தொடங்கியது.

  3. மெஹந்திபூர் பாலாஜி கோயிலின் அமைப்பு:

  மெஹந்திபூர் என்பது ஒன்றும் கிராமம் அல்ல. அது, ஒரு சிறிய நகரம் ஆகும். இங்கு, தினமும் ஏராளமான பார்வையாளர்கள், பக்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

  நாம் ஒரு பார்வையாளராக மெஹந்திபூர் நகருக்குள் நுழைந்ததும், அங்கு சிறு சிறு கடைகள் வரிசையாகக் இருப்பதை காண முடியும்.

  அங்குள்ள மக்களும் தங்கள் வழக்கமான அன்றாட வேலைகளில் பிஸியாக இருப்பதையும் காணலாம்.

  இதனை அடுத்து நாம் கோயில் வளாகத்திற்கு அருகில் வந்தவுடன், அங்கு கோயிலின் கருவறைக்குள் இறைவனை தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களின் நீண்ட வரிசையை நம்மால் காண முடியும். அங்கு உள்ள கடைக்காரர்கள் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் வழிபாட்டிற்கான பொருட்களை விற்கிறார்கள்.

  4. மெஹந்திபூர் பாலாஜி கோயில் வளாகம்:

  கோயில் வளாகம் நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  அங்கு வரும் பக்தர்களில் பாதிக்கப்பட்டவர்கள் (தீய சக்திகளினால் பாதிப்பு அடைந்தவர்கள்) என்று அழைக்கப்படுபவர்களின் குரல் சத்தமாக மற்றும் பயமுறுத்தல் போன்று இருக்கும். அது மட்டும் இன்றி அவர்கள் கத்தி கூச்சல் இடுவார்கள்.

  இவர்களின் சத்தம் கோயிலுக்குள் இருக்கும் முழு வளிமண்டலத்தையும் நிரப்புகின்றன.

  இந்த வகை பாதிக்கப்பட்ட குழுக்களில் குழந்தைகள், ஆண்கள் மற்றும் எல்லா வயதினரும் பெண்கள் உட்பட அனைவரும் உள்ளனர்.

  இங்கு உள்ள முதல் இரண்டு அறைகளில், அனுமன் மற்றும் பைரவர் (Bhairon) போன்ற தெய்வங்கள் காணப்படுகின்றன.

  இந்த கோயிலில் ஒரு சடங்கு கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. எறிந்து கொண்டு இருக்கும் தீயில், பக்தர்கள் தாங்கள் வாங்கிய கருப்பு பந்துகளை வெளியில் இருந்து வீசுவர் என்று கூறப்படுகிறது.

  5. மெஹந்திபூர் பாலாஜி கோயிலின் பேயோட்டுதலின் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:

  பல சடங்கு முறைகளை பயன்படுத்தி பாதிப்பு அடைந்தவர்களை குணப்படுத்துக்கிறார்கள் மற்றும் தீய சக்திகளின் பேயோட்டுதல் ஆகியவை ஆண்டு முழுவதும் இக்கோவிலில் நடைபெறுகின்றன.

  பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் செய்யப்படும், சடங்கின் போது அலறிக் கொண்டு அங்கே உள்ள தூண்களில் தலையை இடித்து கொள்கிறார்கள்.

  கோவில் உள்ள பூசாரிகள் அவர்களை பிடித்து உள்ள தீய சக்திகள் விலக வேண்டும் என்று பாறைகளில் உள்ள சங்கிலிகளை பிடுங்கி அவர்களை அடிப்பதை காணலாம்.

  ஒவ்வொரு நாளும் பல தீய சக்திகள் இங்குள்ளவர்களின் உடல்களிலிருந்து விரட்டப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.

  6. பார்வையாளர்களுக்கான வழிமுறைகள்:

  மக்கள் எப்போதாவது தங்கள் வாழ்க்கையில் இந்த கோவிலைப் பார்க்க ஆர்வமாக இருந்தால், அவர்களுடைய சொந்த நலனுக்காக பின்வரும் வழிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  மெஹந்திபூர்குள் நுழைந்தவுடன் எதையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது நல்லதல்ல. கோயிலுக்குள் நுழைந்தவுடன், யாரையும் தொடக்கூடாது, அவர்களுடன் பேசக்கூடாது என்பதில் பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  பார்வையாளர்கள், தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போது, பிரசாதம் (Prasad) அல்லது சாப்பிடக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது என்பது நல்லது அல்ல.

  தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவை மெஹந்திபூர்யிலுருந்து புறப்படுவதற்கு முன்பு முழுமையாக காலி செய்யப்பட வேண்டும்.

  பல தீய சக்திகள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதால், எந்தவொரு வித்தியாசமான ஒலியின் சத்தத்தையும் நீங்கள் திரும்பிப் பார்க்கக்கூடாது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது.

  இதையும் படிங்க; மகாபாரதம் நடந்தது உண்மைதானா? இதோ விளக்கங்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....