Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுறிப்பிட்ட சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் வேதியியல் பாடம் தேவையில்லை!

    குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் வேதியியல் பாடம் தேவையில்லை!

    பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து மேற்கல்வி படிக்க சேரும் பொது குறிப்பிட்ட சில பாடப் படிப்புகளுக்கு கணிதம் மற்றும் வேதியியல் கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது. 

    என்ஜீனீரிங் போன்ற பாடப் படிப்புகளுக்கு கணிதம் மற்றும் வேதியியல் பாடங்கள் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சில மேற்படிப்பு பாடங்களுக்கு கணிதம் கட்டாயம் இல்லை என்பது நடைமுறையில் இருந்து வந்தது. இதில் மீண்டும் கணிதம் மற்றும் வேதியியல் பாடங்கள் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    ஆண்டு தோறும் பொறியியல் படிப்புகளுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது வழக்கம். மாணவர்களின் படிப்பு ஆர்வம் மற்றும் அவர்கள் விருப்பப் பாடங்களை எடுத்து படிப்பதற்காக இம்மாதிரியான மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கல்வி ஆண்டுக்கான சில மாற்றங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் மிக முக்கிய குறிப்புகளாக பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் மற்றும் வேதியியல் பாடங்கள் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. 

    • வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், கட்டிடக்கலை மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் போன்ற இன்னும் ஒரு சில படிப்புகளுக்கு கணிதம் கட்டாயம் இல்லை. 
    • 12 ஆம் வகுப்பில் கணிதப் பாடம் படிக்காதவர்கள் பொறியியல் படிப்பில் சேரலாம். சேர்ந்த பின் முதல் இரண்டு செமெஸ்டர்களில் ஆரம்ப கணித பாடங்கள் பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் நடத்தப்படும். 
    • கணினி பொறியியல், மின் பொறியியல் மற்றும் மின்னணு பொறியியல் போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் வேதியியல் கட்டாயம் இல்லை. 

    இந்த நடைமுறைகள் அனைத்தும் வரும் கல்வியாண்டில் இருந்து  நடைமுறைக்கு வரும் எனவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது. 

    இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்புகள் அனைத்தும் 12 ஆம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான மேற்படிப்பினை எடுத்து படிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. மேலும் இதனால் மாணவர்கள் மேற்படிப்புக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இந்த நடைமுறைகளைக் கொண்டு வர மாணவர்களின் பெற்றோரும் ஆதரிக்கின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....