Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்மாருதி சுசுகி இந்தியாவின் நிகர இலாபம் இவ்வளவு கோடியா?

    மாருதி சுசுகி இந்தியாவின் நிகர இலாபம் இவ்வளவு கோடியா?

    வளர்ந்து வரும் தற்போதைய நவீன உலகில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளனர். கார் வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பத்திற்கு, வங்கிக் கடன் மற்றும் மாதத் தவணைத் திட்டங்கள் உதவுகிறது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிக்கும் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத காலாண்டில், அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்நிறுவனம் மார்ச் காலாண்டில் நிகர இலாபமாக ரூ.1,838.9 கோடியை ஈட்டியுள்ளது.

    நம் நாட்டில், பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும், மாருதி சுசுகி இந்தியா மக்களிடையே புகழ் பெற்ற நிறுவனம் ஆகும். பிரசித்தி பெற்ற நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த மார்ச் காலாண்டின் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.

    இந்நிறுவனம், 2022 மார்ச் காலாண்டில் நிகர இலாபமாக, ரூ.1,838.9 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த வருட ஆண்டின், இதே மார்ச் காலாண்டைக் காட்டிலும், 58 சதவீதம் அதிகமாகும். கடந்த வருடம் 2021 மார்ச் காலாண்டில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், நிகர இலாபமாக ரூ.1,166.1 கோடி ஈட்டியிருந்தது.

    நடப்பு வருடம், 2022 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், நிகர வருவாயாக ரூ.25,514 கோடியை ஈட்டியுள்ளது. இது சென்ற வருடம் 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும், 11 சதவீதம் அதிகமாகும்.

    அந்தக் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர வருவாயாக ரூ.22,958.6 கோடியை ஈட்டியிருந்தது. 2022 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம், 10 சதவீதம் உயர்ந்து, ரூ.25,016.4 கோடியாக உயர்ந்துள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு, ரூ.60 டிவிடெண்ட் வழங்கமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, பங்கு வர்த்தகம் முடிவடைந்த நேரத்தில், மாருதி சுசுகி இந்தியா நிறுவன பங்கின் விலை, முந்தைய வர்த்தக தினத்தைக் காட்டிலும் 1.97 சதவீதம் குறைந்து ரூ.7,732.75 ஆக இருந்தது.

    இதையும் படிங்க; அட்சய திருதியை உண்மையில் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....