Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசிபலன் தனுசு முதல் மீனம் வரை

    இந்த வார ராசிபலன் தனுசு முதல் மீனம் வரை

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்க கூடிய நல்ல நாட்களாக உள்ளன. இருப்பினும் சிலரால் தீமைகள் வரலாம். தொழிலில் நல்ல dhanusu லாபம் அதிகரிக்கும். நல்ல உற்சாகத்துடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள்.  உங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி வீட்டில் குவிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வரும் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்து நல்ல எண்ணங்களை விதைப்பீர்கள். ஆறுமுகன் வழிபாடு செய்வது நல்ல மன நிம்மதியையும் வலுவையும் கொடுக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வாரநாட்கள் உங்களுக்கு, நீங்கள் முற்றிலும் எதிர்ப்பாராத நன்மைகள் நடக்கக் கூடிய நல்ல நாட்களாக இருக்கின்றன. பணம் magaramவிடயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் தாமதமானாலும் இறுதியில் நல்லதாக முடியும். ஆன்மிக வழிபாடு உங்களை மன நிம்மதிக்கு அழைத்துச் செல்லும். ராம நாமம் சொல்லி ராமரை நினையுங்கள் எல்லாம் நன்மைகளாக முடியும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து நடைபெறக் கூடிய நாட்களாக உள்ளன. தொழிலில் இதுவரை இருந்தப் பிரச்சனைகள் kumbam நீங்கி நல்ல லாபம் அதிகரிக்கும். அலுவகத்தில் பதவி உயர்வு கூடிய சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அனுகூலமான நாட்கள். புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். ஆன்மிக வழிபாடு உங்களை அமைதி நிலையில் வைத்திருக்க உதவும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்க கூடிய நல்ல நாட்களாக அமையவிருக்கின்றன. முதலில் தடைகள் வந்தாலும் அதை உங்கள் அறிவினால் செய்து காட்டுவீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம் விட்டுக் meenamகொடுத்து போவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த குழப்பங்களுக்கு தற்போது தீர்வுகள் கிடைக்கும். வெளியில் செல்லும்போது விநாயக வழிபாடு செய்துவிட்டுச் செல்லுங்கள் நீங்கள் செய்யப் போகும் காரியங்கள் நன்றாக முடியும்.

     

    மேலும் தகவலுக்கு

    இந்த வார ராசி பலன் மேஷம் முதல் கடகம் வரை

    இந்த வார ராசி பலன் சிம்மம் முதல் விருச்சிகம் வரை

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....