Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கு?

    இந்த வார ராசி பலன்கள் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கு?

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் நினைவில் நிற்கும் நல்ல நாட்களாக உள்ளன. ஆடை ஆபரணங்கள் வாங்க நல்ல அனுகூலமான நேரம். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. தொழிலில் தனலாபம் அதிகரிக்கும். அரசாங்க மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். நல்லதே நடக்க நாராயணனை வழிபடுங்கள்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல இனிமையான நாட்களாக உள்ளன. நீங்கள் செய்யும் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணக் காரியங்கள் கைகூடி வரும். வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. ஆன்மிக வழியில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மன மகிழ்வு நிலைக்கும் நல்ல நாட்களாக உள்ளன. உங்களின் குடும்பத்தால் மகிழ்ச்சிகள் ஏற்படும் குறிப்பாக உங்கள் குழந்தைகளால் நீங்கள் மனம் மகிழ்வீர்கள். வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் கொஞ்ச கொஞ்சமாக குறையும். முருகன் வழிபாடு அதிக நன்மைகளைத் தரும்.

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வாரநாட்கள் உங்களுக்கு சிறிது குழப்பங்கள் இருந்தாலும் நல்லது நடக்கக் கூடிய நாட்களாக உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சில இடத்தில் தொல்லைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் மனப் பக்குவம் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு பிடித்தமான உணவுகளையும் உடைகளையும் உண்டும் அணிந்தும் மகிழ்வீர்கள். தொழிலில் நல்ல லாபம் வரும். உங்கள் விடாமுயற்சியால் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். விநாயக வழிபாடு நல்ல வழியைக் காட்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, நன்மைகளும் சிறிது தீமைகளும் கலந்து நடைபெறும் நாட்களாக உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிகள் பொங்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறைக் காட்டுவது நல்லது. திருமணக் காரியங்கள் கைகூடி வரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடுகள் செல்ல வாய்ப்புகள் வரலாம். உங்களின் ஆன்மிக வழியே உயர்வைக் கொடுக்கும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, மகிழ்ச்சிகரமான நல்ல நாட்களாக அமையும். ஆன்மிக வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். எப்போதும் இருப்பதை விட இப்போது நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவுகளின் வருகையால் மனம் மகிழ்வீர்கள். தொழிலில் திருப்பதிகரமான பணவரவு இருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் குடும்ப அமைதி நிலைக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கும் வாய்ப்புகள் உண்டு. குல தெய்வ வழிபாடு உங்களின் மனநிலையை ஒருமைப்படுத்தும். 

    இந்த ராசிபலன்களையும் பாருங்கள்

    இந்த வார ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....