Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கு?

    இந்த வார ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கு?

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடக்கக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. தனலாபம் அதிகரிக்கும், எழுத்துப் பூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவிஉயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பெண்கள் ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப வெற்றிகள் குவியும் நல்ல நாட்களாக உள்ளன. நன்மைகள் நீடிக்க அம்மன் வழிபாடு செய்யுங்கள்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு இனிதான நன்மைகள் நடைபெறக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய அருமையான நாட்கள். மாணவர்களின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் நீங்கி, நீங்கள் எதிர்பார்த்திராத அதிக அளவில் லாபம் அதிகரிக்கும். சிவன் வழிபாடு மேலும் நன்மையைத் தரும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடக்கக் கூடிய அருமையான நாட்களாக உள்ளன. குடும்ப உறவுகளில் இதுவரை இருந்த விரிசல்கள் குறைந்து நல்லிணக்கம் உண்டாகும். முதலீடுகளில் சிறிது கவனம் தேவை. பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. நினைத்தது நடக்க நமச்சிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். 

    கடகம்:

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் நிறையும் நல்ல நாட்களாக உள்ளன. இருப்பினும் சிறிது கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளுடன் சிறிய சண்டைகள் வந்தாலும் மெல்லமாக அது சரி ஆகும். அதிகாரிகளின் ஆதரவால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். செலவுகளும் சிக்கல்களும் வந்தாலும் அது உங்களுக்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவும். முருகன் வழிபாடு நன்மையைத் தரும். 

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல நாட்களாக உள்ளன. குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடைபெறும். பண வரவு தாமதமானாலும் உங்கள் கைகளுக்கு வந்துச் சேர்ந்துவிடும். உறவுகள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வண்டி வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக இருப்பது நல்லது. மேலும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது குடும்ப நலனுக்கு நல்லது. சஞ்சலங்கள் விலக பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி மனதார வழிபடுங்கள்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு  முயற்சிகளால் நல்ல வெற்றிகள் குவியும் நாட்களாக உள்ளன. திருமண பேச்சுகள் துவங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசு பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயரவும் சம்பள உயர்வும் கிடைக்கும். பண விடயங்களில் சிறிது கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டைகள் வந்து மறைய வாய்ப்புகள் உள்ளன.குல தெய்வ வழிபாடு நல்ல வழியை உங்களுக்கு காட்டும்.

    இந்த ராசிபலன்களையும் பாருங்கள்

    இந்த வார ராசி பலன்கள் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....