Monday, March 27, 2023
மேலும்
    Homeஜோதிடம்மார்ச் முதல் வார ராசி பலன்கள்! தனுசு முதல் மீனம் வரை

    மார்ச் முதல் வார ராசி பலன்கள்! தனுசு முதல் மீனம் வரை

    தினம் தினம் நமச்சிவாய மந்திரம் சொல்லுங்கள் சிவனனின் அனுக்கிரகம் எப்போதும் உங்களுடன் இருக்கும். நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தனுசு ராசி: 

    dhanusu

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரத்தில் நன்மைகள் நடக்கக் கூடிய நாட்கள்  இருப்பினும் சில தீமைகள், மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. யாரோடும் அதிகம் பேச வேண்டாம். அளவறிந்து பேசிப் பழுகுங்கள், அதுவே உங்களை அமைதிக்குள்ளாக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறிய மனக் கஷ்டங்கள் ஏற்படலாம். அதனால் சில நன்மைகளும் நடக்கும். குடும்பத்தில் அமைதியும் அன்பும் பெருகும். வெற்றி வேல்! வீர வேல்! என்று தினம் முருகனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். 

    மகர ராசி:

    magaram

    மகர ராசிக்காரர்களே, அதிக நன்மைகள் நடக்க கூடிய நாட்களாக இந்த வாரத்தில் உள்ளன. தொழில் முன்னேற்றமும் அதிக லாபமும் அதுக்கேற்ற செலவுகளும் வந்துச் சேரும். அவசரமின்றி பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும். குடும்பத்தில் சிறிய அளவில் சண்டைகள் வந்து மறையும். புதிய உற்சாகத்தோடு செயல்பட்டு காரியத்தைச் சாதிப்பீர்கள். சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம். தடைகள் நீங்க விநாயக பெருமானை தினம் வணங்கி விட்டுச் செல்லுங்கள்.

    கும்ப ராசி:

    kumbam

    கும்ப ராசிக்காரர்களே, மிகச் சரியான முடிவுகளை எடுக்கும் உங்களுக்கு  நன்மைகள் நிறைந்த நாட்களாக இந்த வாரத்தில் உள்ளன. உங்களின் கடின உழைப்பால் இதுவரை இருந்து வந்த சண்டைகள், தொந்தரவுகள், பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் பெருகும். குழந்தைகளால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிவனை வழிபாடு செய்யுங்கள் சாந்தம் நிலைக்கும்.

    மீன ராசி:

    meenam

    மீன ராசிக்காரர்களே, வரும் நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாட்களாகவே இருகின்றன. உங்களின் உயர்ந்த எண்ணங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முற்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கசப்பு இருந்தாலும் இனி அது இனிப்பாக மாறும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். மனதை நிம்மதியாகவும் அமைதியாகவும் வைத்திருக்க குல தெய்வத்தை நினைத்தே இருங்கள்.

    இதையும் படியுங்கள்! மார்ச் முதல் வார ராசி பலன்கள் சிம்மம் முதல் விருச்சிகம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...