Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுலிவர்பூலிடம் பரிதாபமாக தோற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி : ரொனால்டோ இல்லாததால் இந்த தோல்வியா ?

    லிவர்பூலிடம் பரிதாபமாக தோற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி : ரொனால்டோ இல்லாததால் இந்த தோல்வியா ?

    மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4-0 என்ற கோல்கணக்கில் அபாரமாக தோற்கடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா இரண்டு கோல் அடித்து அசத்தினார். 

    பிரிமியர் லீக் ஆட்டத்தின் லீக் போட்டியில் நேற்று சமபலம் வாய்ந்த அணிகளான லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டமானது லிவர்பூல் அணியின் உள்ளூர் மைதானமான ஆன்பீல்டில் நடைபெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சார்பாக அந்த அணியின் கேப்டன் ரொனால்டோ, அவருடைய கைக்குழந்தை உயிரிழந்த காரணத்தால் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. 

    இதனால் அந்த அணியின் முன்கள ஆட்டக்காரராக ராஷ்ஃபோர்டு களமிறங்கினார். ரொனால்டோ இல்லாதால் அவர்கள் விங் பார்வர்டு முறையில் களமிறங்கவில்லை. ரொனால்டோ இல்லாதது அவர்களை கடுமையாக பாதிக்கும் என்று முன்பே தெரிந்திருக்க வேண்டும். 

    அதேபோல் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் லூயிஸ் டியாஸ் முதல் கோலை அடித்தார். 22வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முகமது சாலா 2வது கோலை அடித்தார். பதிலுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முதல்பாதி  2-0 என முடிவடைந்தது. 

    இரண்டாவது பாதியின் 68வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சேடியோ மானே 3வது கோலை அடித்தார். அதோடு போட்டி முடியவில்லை, ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் முகமது சாலா தன்னுடைய இரண்டாவது கோலை அடித்து 4-0 என லிவர்பூல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

    இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. போட்டிக்கு பிறகு பேசிய இரட்டை கோல் நாயகன் முகமது சாலா, எங்களுக்கு அவர்களை வெல்வது மிகவும் எளிதாக இருந்தது என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரொனால்டோ இல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் எவ்வளவு வலிமையற்று உள்ளது என்பதை அறிய முடிகிறது. அவர் எப்பொழுது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....