Tuesday, May 16, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைதளபதிக்குப் பிறகு மம்மூட்டிக்கு ஒரு மாஸ் படம் : பீஷ்ம பர்வம் திரைவிமர்சனம் !

  தளபதிக்குப் பிறகு மம்மூட்டிக்கு ஒரு மாஸ் படம் : பீஷ்ம பர்வம் திரைவிமர்சனம் !

  இந்தியத் திரையுலக வரலாற்றில் மலையாள சினிமா சமீப காலங்களில் தனக்கான இடத்தை நிலைநாட்டி வருகிறது. அப்படிப்பட்ட வித்தியாசமான  திரைக்களத்துடன் புதுவிதமான கதைகளைச் சொல்லும் மலையாள சினிமாக்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ளது பீஷ்ம பர்வம். 

  2022ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று வெளியான இந்த திரைப்படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் கேரளாவின் முன்னணி இயக்குனர் அமல் நீரத். இவருடைய ஐயோபின்டே புஸ்தகம், காம்ரேட் இன் அமெரிக்கா மற்றும் வரதன் படங்களைப் போலவே இந்த படத்திலும் தன்னுடைய முழுத்திறமையையும் காட்டியுள்ளார் இயக்குனர். 

  இந்த படத்திற்கு ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஷின் ஷியாம் இசையமைக்க, தேசிய விருது பெற்ற திரைப்படத் தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் இந்த திரைப்படத்துக்கான திரைப்படத் தொகுப்பு பணிகளை செய்துள்ளார். 

  மம்மூட்டி, சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, நதியா மொய்டு, சைன் டாம் சாக்கோ, பர்கான் பாசில், தில்லேஷ் போத்தன், ஜினு ஜோசப், அனகா மற்றும் சுதேவ் நாயர் என ஒரு மிகப்பெரிய நடிப்பு பட்டாளத்தையே இறக்கி வைத்துள்ளார் இயக்குனர். அவர்களும் கொஞ்சம் கூட சளைக்காமல் நடித்துத் தள்ளியுள்ளனர். 

  கொச்சியில் உள்ள ஐநூறு குடும்பத்துக்கும், கோச்சேரி குடும்பத்துக்கும் குடும்பப் பகை இருக்கிறது. ஐநூறு குடும்பத்தின் மூத்த வாரிசான பைலியையும் தன்னுடைய நண்பன் அலியையும் கொன்றதற்காக கோச்சேரி குடும்பத்தின் மூத்த வாரிசைக் கொன்றுவிட்டு சிறை செல்கிறார் ஐநூறு குடும்பத்தின் மூன்றாம் வாரிசு மைக்கேல். சிறையில் இருந்து வந்தபின் குடும்பத்தின் தலைமை பொறுப்பும், குடும்பத்தின் தொழில்களை கவனிக்கும் பொறுப்பும் மைக்கேலின் கைகளுக்கு வருகிறது. 

  தனது மூத்த அண்ணனின் மனைவி பாத்திமா இஸ்லாமியர் என்பதால் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பமான ஐநூறு குடும்பத்தில் சிறு உட்பூசல் நிலவுகிறது. ஆனால், அனைவரையும் சமமாக நடத்துகிறார் மைக்கேல். அவருக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு நிலவுவதால் அரசியல் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவும் விளங்குகிறார். 

  இதற்கிடையில் குடும்பப் பிரச்சினை, அரசியல் அதிகார பிரச்சினை மற்றும் பழைய பகை என அனைத்தும் ஒரே நேரத்தில் இணைந்து தாக்க அதனை எப்படி எதிர்கொள்கிறார் மைக்கேல் எனும் பீஷ்மர் என்பதே கதை. 

  திரைப்படம் முழுவதும் புதிது புதிதாக கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. முக்கிய கதாபாத்திரங்களே குறைந்தது 15க்கும் மேல் இருக்கும். அத்தனை கதாபாத்திரங்களையும் சிறப்பாக கையாண்டு படத்தின் இறுதி வரை ரசிக்க வைக்கிறார் இயக்குனர். மறைந்த நடிப்பின் இமயங்களான நெடுமுடி வேணு மற்றும் கே.பி.ஏ.சி. லலிதா இதில் ஒன்றாக நடித்திருப்பது மேலும் இப்படத்திற்கு சிறப்பு. 

  தளபதி படத்திற்குப் பிறகு ஒரு தாதாவாக மம்மூட்டிக்கு இந்த படம் பயங்கர மாஸாக அமைத்துள்ளது. சண்டைகாட்சிகள் எல்லாம் மம்மூட்டியை இன்னும் இளைஞராகத்தான் காட்டுகிறது. மொத்தத்தில் இந்தப்படம் நிறைவடைகையில் அடிபோலி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....