Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுறைந்த விலைக்கு பழங்களை விற்பனை செய்யும் முன்னாள் இந்திய கேப்டன் மஹேந்திர சிங் தோனி !...

    குறைந்த விலைக்கு பழங்களை விற்பனை செய்யும் முன்னாள் இந்திய கேப்டன் மஹேந்திர சிங் தோனி ! ஏன்?

    வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தோனி தன்னுடைய ராஞ்சி பண்ணைவீட்டை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்துள்ளார். 

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் இயற்கை விவசாயத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார். தன்னுடைய சொந்த மாநிலமான ஜார்கண்டின் தலைநகரமான ராஞ்சியில் இதற்காக நிலங்களை வாங்கியிருந்தார். சம்பு என்ற கிராமத்தில் அமைந்துள்ள இவருடைய 43 ஏக்கர் நிலத்தில் பல விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. ஓய்வுக்குப் பிறகு இங்கு அடிக்கடி வரும் தோனி, அங்கு வளரும் பயிர்களோடு அதிக நேரம் செலவிட்டு வந்தார். சென்ற ஆண்டு தன்னுடைய பண்ணையில் முதன் முதலாக விளைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களைத் தன் ட்விட்டர் பக்கத்தில் அதீத மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார். மேலும், இவருடைய பண்ணையில் குடைமிளகாய், முட்டைகோஸ், நிலக்கடலை போன்றவற்றை விளையவைத்து அதனைப் பார்வையிட்டும வருகிறார். சமீபத்தில், அங்கு தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்படி முறையாக பராமரிக்கப்பட்டு வரும் தோனியின் பண்ணை கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையாக உள்ளது. 

    தற்பொழுது வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு தோனி தன்னுடைய பண்ணையை பொதுமக்கள் பார்வைக்காக மூன்று நாட்கள் திறந்து வைத்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்களும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு வருகின்றனர். பண்ணையைப் பார்வையிடுவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். 

    இதுகுறித்து பேசிய தோனியின் விவசாய பண்ணையின் ஆலோசகர் ரௌஷன் குமார், பொதுமக்கள் பார்வைக்காக இந்த விவசாய பண்ணையத் திறந்து வைத்துள்ளோம், இங்கு விளையும் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் விற்கின்றோம். இங்கு விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெரி பழம் 250 கிராம் ரூபாய் 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற முறையிலும் விற்பனை செய்து வருகிறோம். இங்கு விளையும் பொருள்களில் எவ்வித ரசாயன உரமும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இங்கு வரும் பொதுமக்களுக்கு விவசாயம் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார். இங்கு ஆர்வமுடன் வந்து செல்லும் மக்கள் ஸ்ட்ராபெரி பழங்களையும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....