Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புமகா சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு பொங்கலை இப்படிச் செய்யுங்கள்!

    மகா சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு பொங்கலை இப்படிச் செய்யுங்கள்!

    மகா சிவராத்திரி அன்று சிவனை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் வழிபாடு செய்யும்போது சிவனுக்கு நெய் வேத்தியம் படைப்பது வழக்கம். அம்பிகை உலகின் நன்மைக்காக சிவனிடம் விரதம் இருந்து வேண்டிய இந்த சிவராத்திரியில், சிவனுக்கு உகந்த இனிப்பு பொங்கல் எப்படி செய்வது என்பதைக் காணலாம்.

    தேவையானப் பொருள்கள்:

    பச்சரிசி – அரை கிலோ

    பாசி பருப்பு – 100 கிராம்

    பால் – அரை லிட்டர் 

    நெய் – 200 கிராம் 

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 300 கிராம் 

    ஏலக்காய் தூள் சிறிதளவு 

    முந்திரி, திராட்சை, தண்ணீர் தேவையான அளவு

    முதலில் பச்சரிசி பாசி பருப்பை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, குக்கரில் பாசிப்பருப்பு பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து பாலையும் தேவையான அளவு சிறிது தண்ணீரையும் சேர்த்து நான்கு விசில் விட வேண்டும். 

    பிறகு, வெல்லத்தை இடித்து அதில் கொட்டி நன்கு கலந்து விட வேண்டும், வெள்ளம் கரைந்த பின் நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்றவற்றை தூவி இரண்டு நிமிடங்களில் ஒரு கிளறு கிளற வேண்டும், பின்பு தட்டில் எடுத்து வையுங்கள்.

    ( சிலர் பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகைச் சேர்ப்பது வழக்கம் விருப்பம் இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள் )

    இறைவனை வேண்டி விரதம் இருந்து உண்ணுங்கள் சுவையோ சுவை பொங்கலில் மட்டுமல்ல! உங்கள் வாழ்விலும் தான்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....