Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்குமாம்! - ஏன் அப்படி?

  இன்றைய ஐபிஎல் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்குமாம்! – ஏன் அப்படி?

  ஐபிஎல் போட்டிகள் கடந்த 26 ஆம் தேதி ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்தேறியுள்ளது. மூன்று போட்டிகளிலுமே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, பலம் வாய்ந்த அணிகள் என்று கருதப்பட்டுவரும் சென்னை, பெங்களூர், மும்பை அணிகள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று நான்காவது போட்டி நடைபெற உள்ளது.

  இப்போட்டியைக் காண ஓட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். அப்படியென்ன சிறப்பான போட்டி என்று உங்களுக்குள் கேள்வி எழும்புமாயின் அதற்கான பதிலாக இருப்பது, இரு புது அணிகள் முதன்முதலாக மோதிக்கொள்வதுதான். குஜராத் அணி இதற்கு முன்னமே விளையாடியுள்ளது என்றாலும், அப்போது இப்போது வேறு என்றபடிதான் குஜராத் அணி தற்போது உள்ளது.

  அணி விவரம் 

  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோத உள்ளன. இரு புதிய அணிகளும் முதல்முறை ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்குகிறது. அணியின் முக்கிய வீரர்களாக குயின்டன் டி காக், தீபக் ஹூடா, மணிஷ்பாண்டே, க்ருணால் பாண்டியா என பட்டியல் நீள்கிறது.

  அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஹர்திக் பாண்டியா தலைமையில் வலுவான வீரர்களுடன் இன்று களம் காண்கிறது. சுப்மன் கில், ரஷித்கான், முகமது ஷமி என பலரும் களம் இறங்குகின்றனர். 

  மேலும் இப்போட்டியின் மூலம் ஹர்திக் பாண்டியாவம் அவரின் சகோதரர் க்ருணால் பாண்டியாவும் நேருக்கு நேராக மோதவுள்ளது ரசிகர்களை இன்னும் ஆவலடையச் செய்துள்ளது.  ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க வேண்டிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

  வீரர்களை பொறுத்துப்பார்க்கையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கை ஓங்கியே காணப்படுகிறது. அதே சமயம் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை விட கே.எல்.ராகுல் அதிகப் போட்டிகளை விளையாடியுள்ளது. கே.எல்.ராகுலின் இந்த அனுபவம் இப்போட்டிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

  விறுவிறுப்புக்கோ, கேளிக்கைக்கோ இன்று பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதும் ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

  வீரர்கள் விவரம் 

  குஜராத் டைட்டன்ஸ் அணி: மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, பிரதீப் சங்வான், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், குர்கீரத் சிங் மான், தர்ஷன் நல்கண்டே, ரஹ்மானுல்லா குர்பாஸ், டொமினிக் டிரேக்ஸ், சாய் சுதர்சன், யாஷ் தயாள், நூர் அகமது

  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: கே.எல். ராகுல், குயின்டன் டி காக், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மனன் வோஹ்ரா, க்ருனால் பாண்டியா, அங்கித் ராஜ்பூத், கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், எவின் லூயிஸ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, கரண் சர்மா, மயங்க் யாதவ்

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....