Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபந்துவீச்சால் பஞ்சாப்பை திணறடித்த லக்னோ, புள்ளிப்பட்டியிலில் ஏற்பட்ட மாற்றம்!

    பந்துவீச்சால் பஞ்சாப்பை திணறடித்த லக்னோ, புள்ளிப்பட்டியிலில் ஏற்பட்ட மாற்றம்!

    நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மோதிய இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், லக்னோ அணியானது பேட்டிங்கில் களமிறங்கியது.

    அதன்படி, டி காக் மற்றும் கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கினர். எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அதிரச்செய்தார். ஏனைய வீரர்களும் சோதப்ப டிகாக் அவர்கள் 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 

    மேலும், தீபக் ஹூடா 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். ஆதலால் லக்னோ அணியானது 20 ஓவர்களில் மொத்தம் 153 ரன்கள் எடுத்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது.

    இந்த எளிதான இலக்கை பஞ்சாப் அணி அடைந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்க்கையில், லக்னோ அணியின் பந்துவீச்சு, பஞ்சாப் அணியை இலக்கை அடைய விடுவதாக  இல்லை என்ற நோக்கிலேயே இருந்தது. 

    ஆம்! பஞ்சாப் அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களையும் தங்களது பந்துவீச்சு தாக்குதலால் திணற வைத்தது லக்னோ அணி. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாகவே பேர்ஸ்டோ 32 ரன்களும், மயங்க் அகர்வால் 25 ரன்களும் எடுத்தனர். இவர்களைத் தவிர  பஞ்சாப் அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால், பஞ்சாப் அணியானது இருபது ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, வெறுமனே 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

    லக்னோ அணி சார்பில், மோசின் கான் 3 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 

    ஆட்டநாயகன் விருது, நான்கு ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய க்ருணால் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டது. 

    மேலும், இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணியானது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய வைரஸ்கள் : ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு அபாயம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....