Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்தாழ் வெப்பநிலை என்றால் இதுதானாம்; இந்த வெப்பநிலையால் ஆபத்தும் உள்ளதாம்! தகவல் உள்ளே!

    தாழ் வெப்பநிலை என்றால் இதுதானாம்; இந்த வெப்பநிலையால் ஆபத்தும் உள்ளதாம்! தகவல் உள்ளே!

    நம் மனித சமுதாயம் பெரும்பாலும் அதீதம் என்பதையே நோக்கி செல்வார்கள், அதீதம் என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள் என்று ஒரு கூற்று பரவலாக உள்ளது. யோசித்துப் பார்த்தால் அவற்றில் சற்று உண்மையும் இருக்கச் செய்கிறது. ஆம்! அதிகம் என்ற வார்த்தைக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை தாழ்(குறைவு) என்ற வார்த்தைக்கு நாம் தருவதில்லை. அதனால், இம்முறை தாழ் வெப்பநிலை குறித்து காண்போம்.

    வெப்பநிலையில் அதி வெப்ப நிலை எந்த அளவுக்கு உயிரினங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே அளவுக்குத்தான் தாழ் வெப்பநிலையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கால்நடைகளை பொறுத்தமட்டில் தாழ் வெப்ப நிலையால் பெரிதளவில் பாதிப்பு ஏற்படுகிறதென்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தாழ் வெப்பநிலை என்றால் என்ன?

    கால்நடைகளில் சாதாரன உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க (101 – 102.5°F) அளவு (96°F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிதாக பிறந்த குட்டிகளும் இளங்கன்றுகளும் அதிகமாக உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்படுகிறன என்றனர்.

    அதோடு பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து சில நேரங்களில் இறக்கவும் நேரிடுகிறது என்கின்றனர்.

    கால்நடைகளில் தாழ் வெப்பநிலைக்கான காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பவைகள் :

    • தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் இருப்பது.
    • பாதகமான சீதோஷண நிலையினால் போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காதது.
    • ஈரமான மண் உடன் கூடிய இருப்பிடம்.
    • சரிவர நீர் வடியாத கொட்டகை ஆகியவற்றால் உடல் தாழ்வெப்பநிலை தோன்றும்.

    தாழ் வெப்பநிலையின் போது தோன்றும் அறிகுறிகள் : 

    • கால்நடைகள் சோர்வாகவும் தீவனம் எடுக்காமலும் நிற்க முடியாமலும் படுத்து இருக்கும்.
    • மூட்டு பகுதிகள் குளிர்ந்து காணப்படும்.
    • உடல் நடுங்கும்.
    • அதிக இதய துடிப்பும் மூச்சிரைப்பும் காணப்படும்.
    • இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.

    உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் :

    • கால்நடைகள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் இருந்தால், உடனடியாக அவற்றை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும்.
    • காய்ந்த துணி, சாக்கு அல்லது வைகோலை தரையில் பரப்பி அதன் மேல் படுக்க வைக்க வேண்டும்.
    • கொட்டகையில் தண்ணீர் தேங்கி இல்லாமலும் குளிர்ந்த காற்று வீசாதவாறும் பார்துக்கொள்ள வேண்டும்.
    • குடிப்பதற்கு சற்று சூடான தண்ணீரும் உரிய தீவனமும் கொடுக்க வேண்டும்.
    • உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சற்று சூடேற்றப்பட்ட குளுக்கோஸ் திரவத்தை இரத்த குழாய் வழியாக உடலுக்குள் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....