Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமீண்டும் திருப்புமுனையான சேடியோ மானே; மான்செஸ்டர் சிட்டி - லிவர்பூல் ஆட்டத்தின் பரபர நிமிடங்கள்!

    மீண்டும் திருப்புமுனையான சேடியோ மானே; மான்செஸ்டர் சிட்டி – லிவர்பூல் ஆட்டத்தின் பரபர நிமிடங்கள்!

    பிரிமியர் லீக்கின் லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கும் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டெர் சிட்டி அணிகள் மோதிக்கொண்டன. 

    ஏற்கனவே இந்த இரு அணிகளும் தங்களுடைய அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி விட்ட நிலையில், இந்த ஆட்டம் புள்ளி பட்டியலில் சிறு மாற்றத்தை மட்டும் ஏற்படுத்துமே தவிர, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனாலும், இவ்விரு அணிகளும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க வேண்டி கடுமையாக மோதிக்கொண்டன. 

    இந்த போட்டியானது மான்செஸ்டர் சிட்டி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்ற மான்செஸ்டர் சிட்டி அணியின் கெவின் டி புருய்ன் 5வது நிமிடத்தில் அற்புதமாக ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்தார். இதற்கு ஈடு கொடுத்து விளையாடிய லிவர்பூல் அணியினர் 13வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை பதிவு செய்தனர். அந்த அணியின் டியாகோ ஜோடா அந்த கோலை அடித்தார். 

    ஆட்டம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு 37வது நிமிடத்தில் கேபிரியல் ஜீசஸ் இரண்டாவது கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என முன்னிலை பெற்றது. 

    இரண்டாவது பாதி

    ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மான்செஸ்டர் சிட்டி அணியின் பக்கம் சென்று கொண்டிருந்தது. பந்து பெரும்பாலும் மான்செஸ்டர் சிட்டி அணியினரின் இடையே தான் சுத்திக்கொண்டிருந்தது. லிவர்பூல் அணியினர் பந்தை பறிக்க முயற்சித்து மஞ்சள் அட்டைகளை வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம்.

    ஆனால், இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் முகமது சாலா கொடுத்த பாசை,  சேடியோ மானே தன்னுடைய அருமையான கிக் மூலம் கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார். மீண்டும் ஒருமுறை இந்த இணை தங்களின் தரமான ஆட்டத்தை இந்த உலகிற்கு நிரூபித்து காட்டியது.

    மான்செஸ்டர் சிட்டி அணியின் ரகீம் ஸ்டெர்லிங் அடித்த கோல் ஆப்-சைடு ஆகிப்போனதால் போட்டி முடிவில் 2-2 என சமன் ஆனது. புள்ளிபட்டியலில் மான்செஸ்டெர் சிட்டி அணி 74 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், லிவர்பூல் அணி 73 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....