Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசுவிஸ் ஓபனில் இருந்து விலகிய இந்திய நட்சத்திரம் : பி.வி.சிந்து, சாய்னா செல்வார்களா ?

    சுவிஸ் ஓபனில் இருந்து விலகிய இந்திய நட்சத்திரம் : பி.வி.சிந்து, சாய்னா செல்வார்களா ?

    இந்தியாவின் இளம் பேட்மிண்டன் நட்சத்திரம் லக்சயா சென் இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடுமையான இரண்டு வாரங்களுக்குப்பின் இந்த முடிவை அவர் அறிவித்திருந்தாலும், இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து,சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

    20 வயது இளம் வீரரான லக்சயா சென் வளர்ந்து வரும் இந்திய இளம் நட்சத்திரம் ஆவார். நடந்து முடிந்த ஜெர்மன் ஓபனில் இறுதிப்போட்டிவரை முன்னேறி இருந்தார். அதேபோல், மதிப்பு மிக்க ஆல் இங்கிலாந்து ஓபன் 2022 தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேல் விளையாடி வருவதால், இன்று செவ்வாய்க்கிழமை மார்ச் 22ல் நடைபெறும் சுவிஸ் ஓபனில் இருந்து விலகியுள்ளார். ஆனாலும், இரட்டை ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால் ஆகியோர் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றனர்.

    லக்சயா சென் கடந்த இரண்டு வாரங்களில் பரபரப்பான பேசுபொருளாகிப் போன நிலையில், முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் பர்மிங்காமில் காலிறுதிக்குக் கூட முன்னேறவில்லை. அதே நேரத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் கடைசி 8 இடங்களுக்குள் வந்திருந்தார். எனவே, இந்த தொடரில் இவர்களிடமிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்திய பாட்மிண்டன் ரசிகர்கள்.

    2019ஆம் ஆண்டு உலக சாம்பியன் மற்றும் 2ஆம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து தன்னுடைய முதல் போட்டியில் உலகின் 32ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் ஹஜ்மார்க் கெயர்ஸ்ஃபெல்ட்டை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில் சாய்னா நேவால், சீனாவின் ஏழாவது நிலை வீராங்கனை ஆன வாங் ஜி யியை எதிர்கொள்கிறார். உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றதில் இருந்தே நல்ல பார்மில் இருக்கும் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகர்ஷி காஷ்யப் தன்னுடைய முதல் சுற்றில் ஜெர்மனியின் இவோன் லியுடன் மோதுகிறார். கடந்த ஜனவரியில் நடந்த இந்திய ஓபனை வென்ற உலகின் மூன்றாம் நிலை இணையான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ரெட்டி இணை தங்களுடைய முதல் ஆட்டத்தில் இத்தோனேஷியாவைச் சேர்ந்த முஹம்மது சோஹிபுல் ஃபிக்ரி மற்றும் பகாஸ் மௌலானா இணையை எதிர்கொள்கிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....