Thursday, April 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கடற்கொள்ளையரால் சுடப்பட்ட தமிழக மீனவர்; அச்சத்தில் மீனவர்கள்

    கடற்கொள்ளையரால் சுடப்பட்ட தமிழக மீனவர்; அச்சத்தில் மீனவர்கள்

    சவுதிக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் ராஜேஷ்குமார் கடற்கொள்ளையரால் சுடப்பட்டதில் அவருக்கு பார்வை பறிபோனது. 

    கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மீனவரான ராஜேஷ்குமார். இவர் சவுதி அரேபியாவுக்கு மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கொள்ளையர் ஒருவர் ராஜேஷ்குமாரை துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து ராஜேஷ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கண் பார்வை பறிபோனது. 

    இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சவூதி அரேபியாவில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்தப் போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதனிடையே, மீனவர் மீதான தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியரிடம் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மனு அளித்துள்ளது. 

    சவுதி அரேபியாவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடற்கொள்ளையரால் சுடப்பட்டு கண் பார்வை பறிபோன சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    காஷ்மீருக்கு பறந்த ‘தளபதி 67’ படக்குழு; வியக்கவைத்த விஜய் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....