Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிப்பாதைக்கு திரும்பியது கொல்கத்தா : அணிக்கு கிடைத்த புது நாயகன்!

    வெற்றிப்பாதைக்கு திரும்பியது கொல்கத்தா : அணிக்கு கிடைத்த புது நாயகன்!

    ஐபிஎல் 2022 தொடரின் 47வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. டாஸை வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் ஒரு மாற்றமாக அனுகுல் ராய் இடம்பிடித்தார். ராஜஸ்தான் அணிக்கு வழக்கம் போல ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தது. 

    தேவ்தத் படிக்கல் உடனடியாக 2 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆடினர். சிறிது நேரத்தில் ஜோஸ் பட்லரும் 22 ரன்களில் வெளியேற அடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மிகவும் குறைவான ரன்ரேட்டில் இருந்த அந்த அணிக்கு இறுதி ஓவர்களில் சிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. 

    கொல்கத்தா தரப்பில் டிம் சவூதி 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், அனுகுல் ராய் மற்றும் சிவம் மாவி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். சுனில் நரேன் கட்டுக்கோப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

    153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் ஆரோன் பின்ச் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்த வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா இணை கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்க்க தொடங்கியது. ஷ்ரேயஸ் ஐயருக்குப் பின்  ரிங்கு சிங் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. 

    ராஜஸ்தான் தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட், குல்தீப் சென் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    இதையும் படிங்க; உடல் உழைப்பே இல்லாமல் இருக்கீங்களா??? முதலில் உங்க கொலஸ்ட்ரால் அளவை செக் பண்ணுங்க……

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....